நமக்கு வாக்களிக்காதவர்களை கண்டுபிடியுங்கள், அவர்களுக்கு வியூகம் வகுங்கள் - ராகுல்

ஒவ்வொரு தொகுதியிலும் நமக்கு வாக்களிக்காதவரை கண்டுபிடித்து, அவர்களுக்கு திட்டம் வகுத்து அவர்களது நம்பிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று ராகுல் காந்தி பேசினார்.
நமக்கு வாக்களிக்காதவர்களை கண்டுபிடியுங்கள், அவர்களுக்கு வியூகம் வகுங்கள் - ராகுல்

ஒவ்வொரு தொகுதியிலும் நமக்கு வாக்களிக்காதவரை கண்டுபிடித்து, அவர்களுக்கு திட்டம் வகுத்து அவர்களது நம்பிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று ராகுல் காந்தி பேசினார்.

காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி, கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் முதன்முதலாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது,

"காங்கிரஸ் கட்சியின் பங்கு என்பது அது இந்தியாவின் குரலாக ஒலிக்க வேண்டும். மேலும் நிகழ்காலம் மற்றும் வருங்காலத்தின் பொறுப்பு அதற்கு உள்ளது.

இந்தியாவின் கல்வி நிலையங்கள், தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் ஏழை மக்கள் மீது பாஜக தாக்குதல் நடத்திவிட்டது. காங்கிரஸார் இந்தியாவின் ஒடுக்கப்பட்டவர்களுக்காக எழுந்து போராட வேண்டும்.

சுதந்திரப் போராட்ட கால கட்டத்தில் இந்த காரியக் கமிட்டி உருவானது. இந்த மன்றத்தில் தான், ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றுத் தர இந்தியா விவாதித்தது, கருத்துகளை வெளியிட்டது, போட்டியிட்டது, கருத்துகளை ஒன்றிணைத்தது. ஒவ்வொரு இந்தியனிடமும் காங்கிரஸ் காரியக் கமிட்டி தனது குரலை கொண்டு சேர்த்தது. அது இந்தியாவின் பல பார்வைகளை ஒன்றிணைத்தது, மேலும் இந்தியாவின் வலுவிழந்த குரல்களுக்கும் அது இடமளித்தது.

நமது கூட்டு சவாலே தற்போதைய காரியக் கமிட்டியை அந்த அளவுக்கு கொண்டு செல்வது தான்.

காரியக் கமிட்டியில் இளைஞர் மற்றும் அனுபவம் உள்ளவர்களிடம் சமநிலையை கொண்டு வர முயன்றுள்ளோம். இதில் அனுபவமும் ஆற்றலும் உள்ளது. அது கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் வருங்காலத்தை இணைக்கும் பாலமாக அமையும்.   

நமது மிகப் பெரிய பணிகளில் ஒன்று கட்சியின் வாக்கு வங்கியை விரிவுபடுத்துதல். ஒவ்வொரு தொகுதியிலும் நமக்கு வாக்களிக்காதவர்களை கண்டுபிடிக்க வேண்டும். அவர்களுக்காக வியூகங்களை வகுத்து அவர்களிடம் சென்று அவர்களுடைய நம்பிக்கையை திரும்ப பெற வேண்டும்" என்றார்.

இந்தக் கமிட்டியில், காங்கிரஸின் தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் ராகுலுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com