அன்பும், கருணையுமே தேசத்தை கட்டமைக்கும்

மக்களிடம் மிகுதியான அன்பும், கருணையும் காட்டுவது மட்டுமே தேசத்தை கட்டமைபதற்கான ஒரே வழி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அன்பும், கருணையுமே தேசத்தை கட்டமைக்கும்

மக்களிடம் மிகுதியான அன்பும், கருணையும் காட்டுவது மட்டுமே தேசத்தை கட்டமைபதற்கான ஒரே வழி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 முன்னதாக, மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது மக்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை விவாதம் நடைபெற்றபோது, ராகுல் காந்தி 45 நிமிடம் உரையாற்றினார். அதில், பெரும்பாலும் பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அரசையும் கடுமையாக குற்றம்சாட்டினார். இறுதியாக, பேசி முடித்த பின் பிரதமர் மோடியை ராகுல் காந்தி கட்டியணைத்தார்.
 அவரது இந்த செய்கைக்கு பாராட்டும், எதிர்மறை விமர்சனமும் ஒருசேர அணிவகுத்தன. அதே சமயம், ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டு ஒவ்வொன்றுக்கும் மோடி பதிலடி கொடுத்தார்.
 இந்நிலையில், வெறுப்புணர்வு, கோபம் மற்றும் அச்சத்தை பிரதமர் மோடி விதைப்பதாகவும், ஆனால், அன்பாலும், கருணையாலும் காங்கிரஸ் கட்சி அதற்கு பதிலடி கொடுக்கும் எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
 இதுதொடர்பாக, சுட்டுரையில் அவர் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ""மக்களவையில் வெள்ளிக்கிழமை நடந்த விவாதத்தை குறிப்பிட விரும்புகிறேன். பிரதமர் மோடி, வெறுப்புணர்வு, கோபம், அச்சம் ஆகியவற்றை பயன்படுத்தி நம் மக்கள் சிலருடைய இதயங்களில் அவரது எண்ணங்களை கட்டமைக்க முயன்றார்.
 ஆனால், அனைத்து இந்தியர்களின் இதயங்களிலும் அன்பையும், கருணையையும் வளர்ப்பதன் மூலம் மட்டுமே ஒரு தேசத்தை கட்டமைக்க முடியும் என்பதை நாம் நிரூபிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com