ஒடிஸா: மழை வெள்ளப் பகுதிகளில் முதல்வர் ஆய்வு

ஒடிஸா மாநிலத்தில் கன மழை பெய்து வருவதையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அந்த மாநில முதல்வர் நவீன் பட்நாயக் பார்வையிட்டார்.
ஒடிஸா: மழை வெள்ளப் பகுதிகளில் முதல்வர் ஆய்வு

ஒடிஸா மாநிலத்தில் கன மழை பெய்து வருவதையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அந்த மாநில முதல்வர் நவீன் பட்நாயக் பார்வையிட்டார்.
 ஒடிஸா மாநிலத்தில் கடந்த 2 நாள்களாக கன மழை பெய்து வந்த நிலையில், பாலசோர் மற்றும் மயூர்பஞ்ச் பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 7 பேர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர். ராய்காடா மாவட்டத்தில் சனிக்கிழமை காலை சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.
 புரி, கட்டாக், புவனேசுவரம் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள காரணத்தால், அந்த பகுதிகளில் சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட முதல்வர், தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை விரைவில் வெளியேற்றுமாறு நகர்ப்புற மேம்பாட்டுத் துறையினரை கேட்டுக் கொண்டார். வெள்ளம் புகுந்த பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களை அறிவுறுத்தினார்.
 மழை மீட்பு பணிக்கான சிறப்பு ஆணையர் கூறுகையில், மேற்கு ஒடிஸா பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. புரி உட்பட 6 மாவட்டங்களில் 100 மி.மீ-க்கு அதிகமாக மழை பதிவாகி இருக்கிறது. மீட்பு குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உணவு மற்றும் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். புரி பகுதியில் மழை நீர் தேங்கியுள்ள காரணத்தால் ரத யாத்திரை முடிந்து 7 நாள்களுக்கு பின்பு திரும்பும் ஜகந்நாதர் ரதம் பாதிக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் அடுத்த 24 மணி நேரத்துக்கு கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com