சென்னையில் ஜிஎஸ்டி தீர்ப்பாயத்தின் பிராந்திய அமர்வு

சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் பிராந்திய அமர்வுகளில் ஒன்று சென்னையில் அமைக்கப்படவுள்ளதாக தமிழக மீன்வளம், பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர்
சென்னையில் ஜிஎஸ்டி தீர்ப்பாயத்தின் பிராந்திய அமர்வு

சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் பிராந்திய அமர்வுகளில் ஒன்று சென்னையில் அமைக்கப்படவுள்ளதாக தமிழக மீன்வளம், பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் தெரிவித்தார்.
 தில்லி விஞ்ஞான் பவனில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 28-வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் குறித்து செய்தியாளர்களிடம் தமிழக அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:
 மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகத்தின்போது விதிக்கப்படும் ஐஜிஎஸ்டி எனப்படும் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியானது, மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே சரி சமமாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்பட வேண்டும். இந்த ஐஜிஎஸ்டி நிலுவைத் தொகையை காலதாமதமின்றி வழங்க வேண்டும். தற்போதுள்ள நிலுவைத் தொகையில் 90 சதவீதத்தை மாநிலங்களுக்கு ஜூலை இறுதிக்குள் வழங்க வேண்டும் என கூட்டத்தில் தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
 சட்டக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் 48 சட்டத் திருத்தங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இச்சட்டத் திருத்தங்கள் அனைத்தும் வரி செலுத்துவோருக்கு உகந்ததாக அமைந்துள்ளதால், இதில் பெரும்பான்மையானவை தமிழ்நாட்டுக்கு ஏற்புடையவை. ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் மேல்முறையீடு செய்வதற்கான தேசிய அளவிலான மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. தீர்ப்பாயத்தின் பிராந்திய அமர்வுகளில் ஒன்று சென்னையில் அமைக்கப்படவுள்ளது. வரி செலுத்துவோருக்கு பயனளிக்கக் கூடிய வகையில் தற்போது இருந்து வரும் மாதாந்திர விவர அறிக்கை தாக்கல் செய்யும் முறையை மேலும் எளிமைப்படுத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. புதிய விவர அறிக்கை தாக்கல் செய்யும் முறையைத் தொழில்நுட்பக் கோளாறுகள் எதுவும் இன்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
 விவசாயம், மத்திய மற்றும் மாநில கூட்டுறவு வங்கிகள், காப்பீடு, பொறியியல் தொழில் சார்ந்த சில்லறை வேலைகள், கல்வி நிறுவனங்கள், சிட்பண்ட் ஆகியவை சார்ந்த சேவைகள் மீது வரி விலக்கு மற்றும் வரி குறைப்பு செய்வது குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டுமென கோரப்பட்டது. வட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கொண்டு வரப்படும் ஆட்டா அரவை இயந்திர வகைகளுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரிதான் விதிக்கப்படுகிறது. எனவே, வெட் கிரைண்டர் மீதான வரியையும் 5 சதவீதமாகக் குறைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com