நம்பிக்கையில்லா தீர்மானம்: மோடியை பிரான்ஸுடனும், ராகுலை குரோஷியாவுடனும் சிவசேனை ஒப்பீடு

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியையும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் மோதிய பிரான்ஸ், குரோஷியா ஆகிய

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியையும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் மோதிய பிரான்ஸ், குரோஷியா ஆகிய அணிகளுடன் சிவசேனை கட்சி ஒப்பிட்டுள்ளது.
 இதுகுறித்து மும்பையில் சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரௌத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 உலகக் கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் பிரான்ஸ் பட்டத்தை வென்றது. ஆனால் அதேநேரத்தில் இறுதி போட்டியில் தோல்வியடைந்த குரோஷியா தனது விளையாட்டுத் திறனுக்காக நினைவு கூரப்படுகிறது.
 அதுபோல்தான், ராகுல் காந்தி தற்போது நினைவு கூரப்படுவார். எப்போது ஒருவர் இத்தகைய அரசியல் விளையாட்டில் ஈடுபடுகிறாரோ, அப்போது அவர் 4 முதல் 5 மடங்கு முன்னோக்கிச் செல்வார்.
 பிரதமர் மோடியை ராகுல் காந்தி கட்டி அரவணைத்தது குறித்து கேட்கிறீர்கள்.
 பிறரின் கவனத்தை ஈர்ப்பதற்கே இதுபோல் நடத்தப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. மோடிக்கு அதிர்ச்சி கொடுப்பதற்கு, இதுபோல் ராகுல் செய்தார் எனில், அவருக்கு வெற்றி கிடைக்கும்.
 மக்களவையில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், ராகுல் காந்தி புதிய அவதாரத்தை எடுத்தார். இதற்கு அவருக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட வேண்டும். மோடியின் பேச்சானது, பிரதமரின் உரை போல் இருந்தது. மோடியை வேறு யாருடனும் ஒப்பிடுவது சரியாக இருக்காது.
 அதேபோல்தான் ராகுல் காந்தியின் பேச்சும் அமைந்திருந்தது.
 மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு, மக்களவையில் போதிய பெரும்பான்மை பலம் உள்ளது. இதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்றது ஆச்சரியத்தை அளிக்கவில்லை என்றார் சஞ்சய் ரௌத்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com