ராஜஸ்தான் முதல்வர் வேட்பாளர் வசுந்தரா ராஜே: பாஜக அறிவிப்பு

நிகழாண்டு இறுதியில் நடைபெறவுள்ள ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக மீண்டும் வசுந்தரா ராஜே முன்னிறுத்தப்படுவார் என்று
ராஜஸ்தான் முதல்வர் வேட்பாளர் வசுந்தரா ராஜே: பாஜக அறிவிப்பு

நிகழாண்டு இறுதியில் நடைபெறவுள்ள ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக மீண்டும் வசுந்தரா ராஜே முன்னிறுத்தப்படுவார் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அத்தேர்தலில் பாஜக மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 ராஜஸ்தானில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக மாநில செயற்குழுக் கூட்டம், தலைநகர் ஜெய்ப்பூரில் கடந்த இரு நாள்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின் நிறைவு நிகழ்வில் அமித் ஷா கலந்து கொண்டார்.
 அப்போது நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களிடையே பேசிய அவர், "எதிர்வரும் ராஜஸ்தான் பேரவைத் தேர்தலில் வசுந்தரா ராஜே தலைமையில் பாஜக களமிறங்கும்' என்றார். தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்றும், விரைவில் நடைபெறவுள்ள மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் பேரவைத் தேர்தலிலும் பாஜக அளப்பறிய வெற்றியைப் பதிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.
 பாஜக தொண்டர்களும், நிர்வாகிகளும் அர்ப்பணிப்பு உணர்வுடன் தொடர்ந்து பணியாற்றி பேரவைத் தேர்தல்களிலும், 2019 மக்களவைத் தேர்தலிலும் பாஜகவை வாகை சூட வைக்க வேண்டும் என்றும் அமித் ஷா கேட்டுக் கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com