கும்பல் கொலையை தடுக்க சட்ட திருத்தம்: மத்திய அரசு பரிசீலனை

கும்பல் கொலையை தடுக்கும் வகையில், இந்திய தண்டனையியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்தார்.

கும்பல் கொலையை தடுக்கும் வகையில், இந்திய தண்டனையியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்தார்.
 மற்றொரு வாய்ப்பாக, கும்பல் கொலையை தடுப்பதற்கு மாநிலங்கள் ஏற்கும்படியான மாதிரி சட்டத்தை உருவாக்குவது குறித்தும் அரசு பரிசீலித்து வருவதாக அவர் கூறினார்.
 அண்மைக்காலமாகவே, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கும்பல் கொலை மற்றும் கூட்டு வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. சமீபத்திய நிகழ்வாக, ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தமது சொந்த பயன்பாட்டுக்காக பசுக்களை வாகனத்தில் கொண்டு சென்ற நபர், கடத்தலில் ஈடுபட்டதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
 தொடர்கதையாகவும், பெரும் துயராகவும் உருவெடுத்துள்ள இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் சட்டம் இயற்றுமாறு மத்திய அரசை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், மத்திய அரசும் அதற்கான முயற்சிகளை தொடங்கியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
 புதிய சட்டம் இயற்றுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவை விரிவாக ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. புதிய முயற்சிகள் அனைத்தும் தொடக்க நிலையில்தான் இருக்கின்றன.
 இந்திய தண்டனையியல் சட்டத்தில் திருத்தம் செய்தால், கும்பல் கொலையை தடுப்பதற்கான பிரத்யேக சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டிய தேவை ஏற்படாது. தாம் நிரபராதி என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம், குற்றம்சாட்டப்பட்ட நபர் மீதே முன்வைக்கப்படுமானால், இந்திய தண்டனையியல் சட்டத்திலும், இந்திய தடயவியல் சட்டத்திலும் திருத்தம் செய்யப்படுவது அவசியமானதாகும்.
 எனினும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கு இன்னும் சில நாள்கள் தேவைப்படும். அதே சமயம், சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவுதன் மூலமாக கும்பல் கொலை நிகழுவதைத் தடுக்க மிகக் கடுமையான வழிமுறைகளை மத்திய அரசு உருவாக்கும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com