சிறுவர்கள் மீதான பாலியல் தாக்குதல்களுக்கு கூடுதல் தண்டனை அளிக்க பரிந்துரை: மத்திய பெண்கள், குழந்தைகள் நல அமைச்சகம் முடிவு

சிறுவர்கள் மீதான பாலியல் தாக்குதல்களில் ஈடுபடுவோருக்கு அளிக்கப்படும் தண்டனையை அதிகரிக்கும்படி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய மத்திய பெண்கள், குழந்தைகள் நல அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

சிறுவர்கள் மீதான பாலியல் தாக்குதல்களில் ஈடுபடுவோருக்கு அளிக்கப்படும் தண்டனையை அதிகரிக்கும்படி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய மத்திய பெண்கள், குழந்தைகள் நல அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
 இதுகுறித்து மத்திய பெண்கள், குழந்தைகள் நல அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
 பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பான திட்டத்தை மத்திய சட்ட அமைச்சகத்திடம் மத்திய பெண்கள், குழந்தைகள் நல அமைச்சகம் முன்வைத்திருந்தது. அந்தத் திட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் தனது ஒப்புதலை அளித்து விட்டது.
 இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரவையிடம் தனது திட்டத்தை இன்றும் ஒரிரு தினங்களில் மத்திய பெண்கள், குழந்தைகள் நல அமைச்சகம் சமர்ப்பிக்கவுள்ளது.
 இதேபோல், 12க்கும் குறைவான வயதுடைய குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான திட்டத்தையும் மத்திய பெண்கள், குழந்தைகள் நல அமைச்சகம் தயாரித்து வருகிறது என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
 தில்லியில் கடந்த வாரம் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 12க்கும் குறைவான வயதுடைய சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் மசோதாவை கொண்டு வருவது என்று முடிவு செய்யப்பட்டது.
 முன்னதாக,கடந்த 2007ஆம் ஆண்டில் மத்திய பெண்கள், குழந்தைகள் நல அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் 12,447 குழந்தைகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்தது. குறிப்பாக, 53 சதவீத சிறுவர்கள் பாலியல் தாக்குதல்களுக்கு ஆளானது கண்டறியப்பட்டது.
 இந்த எண்ணிக்கையானது, தில்லியில் 60 சதவீதமாக உள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com