சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா: மக்களவையில் அறிமுகம்

12-க்கும் குறைவான வயதுடைய சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா, மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா: மக்களவையில் அறிமுகம்

12-க்கும் குறைவான வயதுடைய சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா, மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவாவில் சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், உத்தரப் பிரதேசம் மாநிலம், உன்னாவ் பகுதியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் ஆகியவைகளைத் தொடர்ந்து, மத்திய அரசால் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, குற்றவியல் சட்ட (திருத்த) அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
அந்த அவசர சட்டத்துக்கு சட்ட அந்தஸ்து கொடுக்கும் வகையில், மக்களவையில் குற்றவியல் சட்ட (திருத்த) மசோதா-2018' என்ற மசோதாவை, மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு திங்கள்கிழமை அறிமுகப்படுத்தினார். அப்போது கிரண் ரிஜிஜூ பேசுகையில், அண்மையில் நடைபெற்ற சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவங்கள், நாட்டு மக்களின் மனசாட்சியை உலுக்கி விட்டது; இத்தகைய கொடிய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று மக்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்துள்ளது' என்றார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மசோதாவில், 12க்கும் குறைவான வயதுடைய சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு குறைந்தப்பட்ச தண்டனையாக 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிகப்பட்சமாக மரண தண்டனையும் விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு தற்போது விதிக்கப்படும் குறைந்தப்பட்ச தண்டனையான 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையை 10 ஆண்டுகளாக அதிகரிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

16 வயதுக்கு குறைவான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு குறைந்தப்பட்ச தண்டனையாக 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும், பாலியல் வன்கொடுமை குற்றங்களில் தொடர்புடையோரை விரைந்து கைது செய்வதுடன், அதுதொடர்பான வழக்குகள் மீதான விசாரணையை 2 மாதகாலத்துக்குள் விரைந்து நடத்தி முடிக்க வேண்டும், பின்னர் மேல்முறையீடு எதுவும் செய்யப்பட்டால், அதன் மீதான விசாரணையை 6 மாதகாலத்தில் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 16 வயதுக்கு குறைவான சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவோருக்கு, முன்ஜாமீன் அளிக்கக் கூடாது, அந்த குற்றத்தில் ஈடுபடுவோர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யும்பட்சத்தில், அந்த மனு குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கும் முன்பு, அதுகுறித்து அரசு வழக்குரைஞர், பாதிக்கப்பட்ட சிறுமி ஆகியோர் கருத்து தெரிவிக்க 15 நாள்கள் நோட்டீஸ் அளிக்க வேண்டும் எனவும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com