நீட் எழுதிய மாணவர்களின் தகவல் கசிவா?: ராகுல் புகாருக்கு சிபிஎஸ்சி மறுப்பு 

நீட் தேர்வெழுதிய மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள் இணையதளங்களில் பணத்துக்கு விற்கப்பட்டதாக கூறிய ராகுலின் குற்றச்சாட்டுக்கு சிபிஎஸ்இ மறுப்புத் தெரிவித்துள்ளது. 
நீட் எழுதிய மாணவர்களின் தகவல் கசிவா?: ராகுல் புகாருக்கு சிபிஎஸ்சி மறுப்பு 

புது தில்லி: நீட் தேர்வெழுதிய மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள் இணையதளங்களில் பணத்துக்கு விற்கப்பட்டதாக கூறிய ராகுலின் குற்றச்சாட்டுக்கு சிபிஎஸ்இ மறுப்புத் தெரிவித்துள்ளது. 

நீட் தேர்வெழுதிய மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள், இணையதளங்களில் பணத்துக்கு விற்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் தகவல் குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் சிபிஎஸ்இக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.    

சிபிஎஸ்இ நிர்வாகி அனிதா கர்வாலுக்கு ராகுல் எழுதியிருக்கும் கடிதத்தில், இதுபோன்ற தகவல்களைப் பாதுகாக்கும் பணியில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வெழுதிய சுமார் 2 லட்சம் மாணவர்களின் பெயர், செல்போன் எண்கள், மின்னஞ்சல் முகவரி போன்றவை சில இணையதளங்களில் பணத்துக்காக விற்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இது குறித்து ராகுல் எழுதியிருக்கும் கடிதத்தில், இந்த செய்தி அறிந்து தான் கடும் அதிர்ச்சியடைந்தேன். நாடு முழுவதும் தேர்வு எழுதிய மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுபோன்ற தகவல்களை பாதுகாக்க, கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் நீட் தேர்வெழுதிய மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள் இணையதளங்களில் பணத்துக்கு விற்கப்பட்டதாக கூறிய ராகுலின் குற்றச்சாட்டுக்கு சிபிஎஸ்இ மறுப்புத் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சிபிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் நீட் தேர்வெழுதிய மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள் எதுவும் விற்கப்படவில்லை. இணையதளங்களில் பணத்துக்கு தகவல்கள் விற்கப்பட்டதாக ராகுல் கூறிய குற்றச்சாட்டு ஆதாரமற்றது. மாணவர்களின் தனிப்பட்ட தகவல்களனைத்தும் தேசிய தகவல் மையத்தில் பாதுகாப்பாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com