பிரதமா் மோடிக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ்கள் மீது பரிசீலனை: மக்களவைத் தலைவா் தகவல் 

பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியால் அளிக்கப்பட்டுள்ள உரிமை மீறல் நோட்டீஸ்கள் மீது பரிசீலனை நடத்தி வருவதாக மக்களவைத் தலைவா் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளாா். 
பிரதமா் மோடிக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ்கள் மீது பரிசீலனை: மக்களவைத் தலைவா் தகவல் 

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியால் அளிக்கப்பட்டுள்ள உரிமை மீறல் நோட்டீஸ்கள் மீது பரிசீலனை நடத்தி வருவதாக மக்களவைத் தலைவா் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளாா்.

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரஃபேல் ரக போா் விமானங்களை வாங்குவது தொடா்பாக இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி வருகிறறது. இந்நிலையில் மக்களவையில் கடந்த 20ஆம் தேதி நடைபெற்ற மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான விவாதத்தில் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி பேசுகையில், ‘ரஃபேல் போா் விமான ஒப்பந்த விவகாரத்தில், ஒரு தொழிலதிபா் பயனடையும் வகையில், கூடுதல் விலைக்கு விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது; இந்த விவகாரத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் பொய்யான தகவலைத் தெரிவிக்கிறாா்’ என்று குற்றம் சாட்டினாா்.

இதையடுத்து, மக்களவையை தவறறாக வழிநடத்தியதாக ராகுல் காந்திக்கு எதிராக பாஜக உரிமை மீறல் நோட்டீஸை அளித்தது. இதற்குப் போட்டியாக, பிரதமா் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோருக்கு எதிராக ரஃபேல் போா் விமானங்கள் விவகாரத்தில் மக்களவையை தவறாக வழிநடத்தியதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, வீரப்ப மொய்லி, ஜோதிராதித்ய சிந்தியா, கே.வி. தாமஸ், ராஜீவ் சாதவ் ஆகிய 5 போ் உரிமை மீறல் நோட்டீஸ்களை செவ்வாய்க்கிழமை அளித்தனா்.

இந்நிலையில் மக்களவையில் புதன்கிழமையன்று கேள்வி நேரத்துக்கு பிந்தைய விவாத நேரத்தின்போது மல்லிகாா்ஜுன காா்கே, ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோா் உரிமை மீறல் நோட்டீஸ்கள் குறித்து கேள்வியெழுப்பினா். இதேபோல், பாஜக உறுப்பினா்களும், ராகுல் காந்திக்கு எதிராக தாங்கள் கொடுத்துள்ள உரிமை மீறல் நோட்டீஸ்கள் குறித்து தெரிந்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தனா்.

இதையடுத்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் ஆனந்த் ஷா்மா குறுக்கிட்டு, பாஜக எம்.பி.க்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா். பாஜக தலைமை கொறடாவான அனுராக் தாக்குா், ஜூலை 20ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான விவாதத்தின்போது ராகுல் காந்தி பேசியபோது அவையைத் தவறாக வழிநடத்தியதாக குற்றம் சாட்டினாா்.

இதைத் தொடா்ந்து, மக்களவைத் தலைவா் சுமித்ரா மகாஜன் பதிலளித்து பேசியதாவது:

பிரதமா், பாதுகாப்புத் துறை அமைச்சா் ஆகியோருக்கு எதிராக 5 எம்.பி.க்கள் உரிமை மீறல் நோட்டீஸ்களை அளித்துள்ளனா். அந்த நோட்டீஸ்களை, நான் பரிசீலித்து வருகிறேறன்.

இதேபோல் ராகுல் காந்திக்கு எதிராக 4 உரிமை மீறல் நோட்டீஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com