அகில இந்திய லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்

தில்லியில் சாலைப் போக்குவரத்துத் துறை செயலாளர் மாலிக்குடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து 8 நாட்களாக நடைபெற்று வந்த லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

தினசரி பெட்ரோல், டீசல் விலை மாற்றத்தை திரும்பப்பெற வேண்டும், காப்பீட்டுக் கட்டண உயர்வு, சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை 20 ஆம் முதல் நாடு தழுவிய அளவில் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வந்தது.

இந்த போராட்டத்தால் மத்திய, மாநில அரசுகளுக்கு ஏராளமான கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு ஆங்காங்கே தட்டுப்பாட்டு ஏற்பட்டது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்து வந்தது. 

இந்நிலையில், சாலைப் போக்குவரத்துத் துறை செயலாளர் மாலிக் மற்றும் அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் இடையே வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து 8 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். 

இந்த பேச்சுவார்த்தையின் போது அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் தலைவர் குல்தரன் சிங் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com