போராட்டம் திரும்பப் பெறப்பட்டதில் மகிழ்ச்சி: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
போராட்டம் திரும்பப் பெறப்பட்டதில் மகிழ்ச்சி: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த 8 நாள்களாக நடைபெற்று வந்த லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை இரவு வாபஸ் பெறப்பட்டது. லாரி உரிமையாளர்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில்,

மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று தேசிய அளவிலான லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் பேருதவி செய்துள்ளார். ஏற்கனவே வைக்கப்பட்ட பலதரப்பட்ட கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக பிரத்தியேக உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com