அசாம் குடிமக்கள் வரைவு பதிவேடு திட்டத்தில் அரசு மெத்தனம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

அசாம் குடிமக்கள் வரைவு பதிவேட்டில் அரசு மெத்தனமாக செயல்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அசாம் குடிமக்கள் வரைவு பதிவேடு திட்டத்தில் அரசு மெத்தனம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

அசாம் குடிமக்கள் வரைவு பதிவேட்டில் அரசு மெத்தனமாக செயல்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி கூறுகையில், "1985-இல் அசாம் மாநிலத்துக்காக போடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவு செய்வதற்காக மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இந்த தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டுவரப்பட்டது. 

ஆனால், மத்தியில் இருக்கும் பாஜக மற்றும் அசாம் மாநிலமும் இதனை செயல்படுத்திய விதம் 1200 கோடி ரூபாய் வரை செலவிட்ட போதிலும் மிகவும் மெத்தமான உள்ளது. அசாமில் வசிக்கும் பல்வேறு இந்தியர்களின் பெயர்கள் இந்த பதிவேட்டில் இடம்பெறாதது மாநிலத்தில் பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சனை சரிசெய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

அசாமில் அமைதி நிலவவும், இந்த வரைவு பதிவேடு மூலம் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கும் சாதி, மத, இன பாகுபாடு பார்க்காமல் காங்கிரஸ் தொண்டர்கள் உதவிட வேண்டும்" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com