ஆசியான் நாடுகள் சந்திப்பு: தாயகம் திரும்பினார் பிரதமர் மோடி

ஆசியான் கூட்டமைப்பு நாடுகளுடனான சந்திப்பை தொடர்ந்து பிரதமர் மோடி சனிக்கிழமை இந்தியா திரும்பினார்.
ஆசியான் நாடுகள் சந்திப்பு: தாயகம் திரும்பினார் பிரதமர் மோடி

ஆசியான் கூட்டமைப்பு நாடுகளுடனான சந்திப்பை தொடர்ந்து பிரதமர் மோடி சனிக்கிழமை இந்தியா திரும்பினார்.

ஆசியான் கூட்டமைப்பைச் சேர்ந்த இந்தோனேஷியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளுக்கும் பிரதமர் நரேந்தி மோடி, 5 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார்.

இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடூடூவுடனான சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவு, பொருளாதார சீர்திருத்தம், தொழில்நுட்ப மேம்பாடு, கடல்சார் வணிகம், சுற்றுலா மேம்பாடு மற்றும் கலாசாரம் உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் 15 முக்கிய அம்ச ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

மேலும் மலேசியாவில் புதிதாகப் பதவியேற்றுள்ள பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தவர், அந்நாட்டுடனான நல்லுறவு விவகாரங்கள் தொடர்பாக விவாதித்தார்.

இதையடுத்து சிங்கப்பூருக்கு இறுதியாக வந்த பிரதமர் மோடி, இருநாடுகளுக்கு இடையில் 14 முக்கிய ஒப்பந்தங்களை ஏற்படுத்தினார். மேலும் டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடர்பாக அங்கு நடைபெற்ற கருத்தரங்கில் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com