சமூக விரோதிகள் சட்டத்தை கையில் எடுக்க ஜேடிஎஸ்/காங்., அனுமதிக்குமா? - காலாவுக்காக பிரகாஷ் ராஜ் கேள்வி

கர்நாடகாவில் காலா திரைப்பட எதிர்ப்புக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு கரம் நீட்டி குரல் எழுப்பியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கர்நாடகாவில் காலா திரைப்படத்தை வெளியிட கர்நாடக வர்த்தக சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு காரணம் ரஜினி காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்தது தான். அதனால், ஜூன் 7-ஆம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் காலா திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகுமா என்பது சந்தேகத்தில் உள்ளது.

இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் காலா பட எதிர்ப்பை எதிர்த்து ட்வீட் செய்துள்ளார். அதில், அவர் நான் வெறும் கேள்வி கேட்கிறேன் என்று ஒரு கட்டுரையை பதிவிட்டுள்ளார். அந்த கட்டுரையுடன் அவர் கூறியிருப்பதாவது, 

"காவிரி விவகாரத்தில் காலா திரைப்படம் என்ன செய்தது? ஏன் எப்போதும் சினிமா சகோதரத்துவமே தாக்கப்படுகிறது? பத்மாவத் திரைப்படத்துக்கு பாஜகவினர் செய்தது போல் ஜேடிஎஸ்/காங் அரசு சமூக விரோதிகள் சட்டத்தை கையில் எடுக்க அனுமதிக்குமா? அல்லது சாமானிய மனிதனின் தேவைக்கான உரிமையை உறுதிபடுத்துமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

அவர் இந்த பதிவுடன் வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது, 

"காவிரி விவகாரத்தில் உணர்வுப்பூர்மாக செயல்படாமல், நடைமுறையில் சாத்தியமாக செயல்பட்டு தீர்வு கண்டுபிடிக்கவேண்டும்.

காவிரி விவகாரத்தில் இருமாநில அரசுகள், மத்திய அரசு நிபுணர்களுடன் அமர்ந்து விவசாயிகளின் பிரச்சனை, நதிநீர் பங்கீடு மற்றும் இயற்கை குறித்து ஆராய்ந்து நல்ல தீர்ப்பை வெளியிடவேண்டும். 

ஆனால், இதற்காக காலா படத்தை எதிர்ப்பது ஏன்? ரஜினி கூறிய கருத்து காயப்படுத்தியுள்ளது. ஆம், ஒப்புக்கொள்கிறேன். ஆனால், நமது எதிர்ப்பை காண்பிப்பதற்கு சிலர் படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதை தான் கன்னட மக்கள் விரும்புகிறார்களா. கன்னட மக்கள் சார்பாக சில சமூக விரோதிகள் இதனை தீர்மானிக்கின்றனர்.  
திரைப்படத்தை வெளியிடுவதை நிறுத்துவதன் மூலம் அந்த படத்துக்காக உழைத்த எண்ணற்ற தொழிலாளர்கள் பாதிப்படைவர்.

முன்னதாக நான் எனது கருத்தை வெளிப்படுத்தியதற்கு நான் ஹிந்து அல்ல, இந்தியன் அல்ல என்று என் மீது விமர்சனம் எழுந்தது. அதனால், தற்போது தான் கன்னடத்தைச் சேர்ந்தவன் இல்லை என்று விமர்சனம் வைத்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்" என்பதை விரிவாக தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com