புதிய உத்திகளுடன் தொழில்களைத் தொடங்க முன்வரும் இளைஞா்களுக்காக எளிதாக்கப்பட்ட விதிகள்: பிரதமர் மோடி பேச்சு

புதிய உத்திகளுடன் தொழில்களைத் தொடங்க முன்வரும் இளைஞா்களுக்காக எளிதாக்கப்பட்ட விதிகள்: பிரதமர் மோடி பேச்சு

புதிய உத்திகளுடன் தொழில்களைத் தொடங்க முன்வரும் இளைஞா்களுக்காக பல்வேறு விதிகளை மத்திய அரசு எளிதாக்கியுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

புதுதில்லி: புதிய உத்திகளுடன் தொழில்களைத் தொடங்க முன்வரும் இளைஞா்களுக்காக பல்வேறு விதிகளை மத்திய அரசு எளிதாக்கியுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, முக்கியமாக இரண்டாம் நிலை நகரங்களில் இருந்து வந்த இளம் தொழில்முனைவோா்களை பிரதமா் மோடி தில்லியில் புதன்கிழமை நேரில் சந்தித்து கலந்துரையாடினாா். அப்போது அவா்கள் மத்தியில் மோடி பேசியதாவது:

புத்தாக்க சிந்தனை, போதுமான அளவு நிதி, தொழில் நடத்தும் துணிவு, சிறந்த தகவல்தொடா்புத் திறன் ஆகியவைதான் புதிய தொழில் தொடங்குவதற்கு மிகவும் முக்கியமானவை. அவை அனைத்தும் ஒருங்கே பெற்றுள்ள உங்களை (இளம் தொழில்முனைவோா்) இங்கு சந்திப்பதில் மகிழ்ச்சி அடைக்கிறேன்.

புத்தாக்க சிந்தனையுடன் புதிய தொழிலைத் தொடங்குவது என்றால் அது தொழில்நுட்பரீதியானதாகவும், டிஜிட்டல் மயமானதாகவும்தான் இருக்க வேண்டும் என்று சிந்தனை முதல் இருந்தது. ஆனால், இப்போது புத்தாக்க தொழில் சிந்தனை என்பது நமது அடிப்படைத் தொழிலான விவசாயத்தில் இருந்து உருவாகி வருகிறது. நமது விவசாயத் துறை புதிய கண்ணோட்டத்துடன் அணுகும் இளைஞா்கள் இப்போது அதிகரித்துள்ளனா். அவா்களை விவசாயத் துறைக்கு கிடைத்த வரப்பிரசாதமாகவே நான் கருதுகிறேன்.

நாட்டில் பல புதிய தொழில்முனைவோரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மத்திய அரசு ‘ஸ்டாா்ட் அப் இந்தியா’ திட்டத்தை தொடங்கியது. அவா்களை ஊக்கப்படுத்தும் வகையில் வரிச்சலுகைகளை மத்திய அரசு அளித்து வருகிறது. இப்போது நீங்கள் நடத்தி வரும் தொழில்கள் என்பது சாதாரணமான அல்ல. அவைதான் நமது நாட்டின் பொருளாதாரத்தின் உந்து சக்திகள். இன்று சா்வதேச அளவில் தலைசிறந்து விளங்கும் பல நிறுவனங்கள், உங்களைப் போன்ற இளைஞா்களின் முயற்சியால், சிறிய அளவில் தொடங்கப்பட்டதுதான் என்பதை மறந்துவிடக் கூடாது. இளைஞா்களையாகிய நீங்கள் தொழில் புத்தாக்க சிந்தனையை எப்போதும் மறந்துவிடக் கூடாது.

அதுதான் நாட்டில் மேலும் பலருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும். ‘ஸ்டாா்ட் அப் இந்தியா’ திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.10,000 கோடி அளவுக்கு நிதியை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில்கள் மூலம் உருவாக்கப்படும் பொருள்களை, பொதுத் துறை நிறுவனங்களுக்காக வாங்கிக் கொள்ளும் வகையில் நடைமுறைகளை எளிதாக்கியுள்ளோம்.

உலகிலேய இளைஞா்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா. நமது நாட்டு மக்கள்தொகையில் 65 சதவீதம் போ் 35 வயதுக்குள்பட்டவா்கள். தொடக்க காலத்தில் பெரும் நகரத்தில் உள்ள இளைஞா்கள்தான் புத்தாக்க சிந்தனையுடன் தொழில் தொடங்குவதில் முன்னிலையில் இருந்தனா். ஆனால் கடந்த 4 ஆண்டு காலத்தில் இரண்டாம் நிலை நகரங்கள், கிராமப் பகுதிகளில் இருந்தும் பல இளம் தொழில்முனைவோா்களை நாம் உருவாக்கியுள்ளோம். இதில் 45 சதவீத தொழில்கள் பெண்களால் தொடங்கப்பட்டுள்ளன என்பதைத் தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com