கர்நாடக அமைச்சரவையின் ஒரே பெண் அமைச்சரும், அவரது மூன்று முக்கிய சிறப்பம்சங்களும் 

கர்நாடக அமைச்சரவையின் ஒரே பெண் அமைச்சராக, முன்னாள் நடிகையும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான ஜெயமாலா சேர்க்கப்பட்டுள்ளார்.
கர்நாடக அமைச்சரவையின் ஒரே பெண் அமைச்சரும், அவரது மூன்று முக்கிய சிறப்பம்சங்களும் 

பெங்களூரு:  கர்நாடக அமைச்சரவையின் ஒரே பெண் அமைச்சராக, முன்னாள் நடிகையும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான ஜெயமாலா சேர்க்கப்பட்டுள்ளார்.

குமாரசாமி தலைமையிலான கர்நாடகா கூட்டணி அமைச்சரவையில் புதிய அமைச்சராக காங்கிரஸின் ஜெயமாலா புதனன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கர்நாடக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக திரைத்துறையினை சேர்ந்த ஒருவர் நேரடியாக அமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்வது இதுவே முதன்முறையாகும்.

இவருக்கு முன்னதாக அனந்தநாக், உமாஸ்ரீ மற்றும் குமார் பங்காரப்பா உள்ளிட்டோர் துணை அமைச்சர்களாகவே முதலில் அரசில் பங்கேற்றுள்ளனர். ஜெயமாலா தற்பொழுது கர்நாடக சட்டப்பேரவையின் மேலவை உறுப்பினராக உள்ளார்.

அமைச்சராக பதவியேற்றுள்ளது பற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மூன்று விஷயங்களை முதன் முறையாகச் செய்தவள்  என்ற பெருமை எனக்கு உண்டு. நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் கரநாடகாவின் 'பில்லவா' சமூகத்திலிருந்து கர்நாடக மேலவைக்கு தேர்தெடுக்கப்பட்ட முதல் உறுப்பினர்; கன்னட திரைத்துறையிலிருந்து தனிப் பொறுப்புடன் அமைச்சரவையில் பங்கேற்கும் முதல் உறுப்பினர் மற்றும் கர்நாடக சட்டப் பேரவையின் மேலவை குழுத் தலைவராக தேர்தெடுக்கப்பட உள்ள பெண் ஆகியவை எனது சிறப்புகளாகும்.

நான் பொதுவாக எந்த பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை. எனது திறமைக்கு அங்கீகாரமாகவே பதவிகளை அளிக்கிறார்கள். எனக்கு சட்ட விவகாரங்கள் துறை கிடைக்கும் என்று நினைக்கிறேன். எந்த துறை அளிக்கப்பட்டாலும் பணிபுரியத் தயாராக இருக்கிறேன். பெண்கள் தொடர்பான விவகாரங்களை கவனிக்கும் பொறுப்புகளை எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கர்நாடகாவின் மற்ற சில நடிகர்களை போல கட்சிகளை மாற்றிக் கொண்டே இருக்காமல் அரசியலில் ஈடுபட்டது முதல் காங்கிரஸிலேயே தொடந்து இருந்து வருகிறார். அதேசமயம் சபரிமலையில் கோவிலுக்குள் சென்றதாக இவர் மீது எழுந்த குற்றச்சாட்டால் சர்ச்சை உண்டானது நினைவிருக்கலாம்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com