ஜூன் 13-ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்: 2019 தேர்தலுக்காக மோடி நடவடிக்கை?

ஜூன் 13-ஆம் தேதி அமைச்சரவை கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டியுள்ளார்.
ஜூன் 13-ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்: 2019 தேர்தலுக்காக மோடி நடவடிக்கை?

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி 4 ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து வரும் 13-ஆம் தேதி மோடி அமைச்சரவை கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, அரசின் திட்டங்கள் குறித்து மறுஆய்வு மற்றும் கடைசி ஆண்டு ஆட்சியில் செய்யவேண்டிய செயல்கள் குறித்து ஆலோசிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 

இந்த கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டம் நாடாளுமன்றத்தில் நடைபெறுகிறது. அண்மையில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் தோல்விகளை சந்தித்துள்ளதால் 7 மாதங்களுக்குப் பிறகு வரும் புதன்கிழமை அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. 

இந்த கூட்டத்தின் போது பிரதான் மந்திரி ஜன் அவ்ஷாதி யோஜனா, ஆயுஷ்மான் பாரத், பிரதான் மந்திரி பாசல் பிமா யோஜனா, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா, முத்ரா யோஜனா உள்ளிட்ட திட்டங்கள் குறித்து மறுஆய்வு செய்து விவாதிக்கப்படவுள்ளது என தெரிகிறது. 

மக்களவை இடைத்தேர்தல்களில் தோல்வி, அடுத்த ஆண்டு தேர்தல் என இரண்டையும் கவனத்தில் கொண்டே இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com