ஆர்எஸ்எஸ் தொடர்ந்த அவதூறு வழக்கு: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டுகள் பதிவு

மகாத்மா காந்தி கொலை தொடர்பாக ராகுல் தெரிவித்த கருத்துகளுக்காக ஆர்எஸ்எஸ் தொடர்ந்த அவதூறு வழக்கில், ராகுல் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.
ஆர்எஸ்எஸ் தொடர்ந்த அவதூறு வழக்கு: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டுகள் பதிவு

மும்பை: மகாத்மா காந்தி கொலை தொடர்பாக ராகுல் தெரிவித்த கருத்துகளுக்காக ஆர்எஸ்எஸ் தொடர்ந்த அவதூறு வழக்கில், ராகுல் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மஹாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின்போது மகாத்மா காந்தி கொலைக்கு ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவரது இந்தப் பேச்சு தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஒருவர் தானே மாவட்டம் பிவண்டியில் உள்ள நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். முதலில் ராகுல் இந்த கருத்தை வாபஸ் வாங்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் தான் இந்த வழக்கினை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள உள்ளதாக ராகுல் உறுதிப்படுத்தினார்.  

ஆனால் கடந்த ஏப்ரல் 23-ந் தேதி பிவண்டி நீதிமன்றத்தில் முதன்முறையாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ராகுல் காந்தி ஆஜராகவில்லை. பின்னர் மே மாதம் 2-ந் தேதி விசாரணைக்கும் அவர் ஆஜராகவில்லை. கர்நாடக தேர்தல் பிரசாரத்தின் காரணமாக ராகுல் காந்தி ஆஜராகவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜூன் 12-ந் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் மும்பையின் கோரேகாவ் பகுதியில் உள்ள கண்காட்சி மையத்தில் நடக்கும் காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள ராகுல்காந்தி செவ்வாயன்று மும்பைக்கு வருகை தந்தார்.  காலை 11 மணி அளவில் பிவண்டி நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜரானார். அவர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டது. இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 499 மற்றும் 500 ஆகிய பிரிவுகளின் கீழ் ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com