வங்கி மோசடி: நிரவ் மோடிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் 

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் நிரவ் மோடிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வங்கி மோசடி: நிரவ் மோடிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் 

மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் நிரவ் மோடிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி. இவர் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் உறுதி அளிப்புக் கடிதங்கள் மூலம் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது தொடர்பாக உறுதியான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை 

இந்த மெகா மோசடி தொடர்பாக பி. என்.பி வங்கி நிர்வாகம் சிபிஐயில் அளித்த புகாரைத் தொடர்ந்து, நிரவ்  மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோருக்குச் சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக பல கோடி ரூபாய் மதிப்பிலான நிரவ் மோடியின் சொத்துகள் முடக்கப்பட்டன.

இதுதொடர்பாக அவர் மீது நிதிமோசடிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது குற்றப்பத்திரிகையில்  நிரவ் மோடி, மெகுல் சோக்சி, மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் தலைவர் உஷா அனந்தசுப்பிரமணியன் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் நிரவ் மோடிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை நிதி மோசடிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com