ஆம் ஆத்மியின் அடுத்த நகர்வு: நேரம் ஒதுக்குவாரா குடியரசுத் தலைவர்?

தில்லியில் நிகழும் சூழல் குறித்து விளக்கம் தர குடியரசுத் தலைவரிடம் நேரம் ஒதுக்குமாறு ஆம் ஆத்மியின் மக்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் புதன்கிழமைகடிதம் அனுப்பியுள்ளார்.
ஆம் ஆத்மியின் அடுத்த நகர்வு: நேரம் ஒதுக்குவாரா குடியரசுத் தலைவர்?

தில்லியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அரசு உயர் அதிகாரிகளை உடனடியாகப் பணிக்குத் திரும்ப உத்தரவிடக் கோரி, தில்லி துணைநிலை ஆளுநர் மாளிகையில் முதல்வர் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர்கள் சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய் ஆகியோர் மேற்கொண்டுள்ள உள்ளிருப்புப் போராட்டம் 3-ஆவது நாளாக இன்றும் (புதன்கிழமை) நீடிக்கிறது.

இந்நிலையில், ஆம் ஆத்மியின் மக்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் குடியரசுத் தலைவருக்கு நேரம் ஒதுக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து, அவர் கூறுகையில்,

"முதல்வர் கேஜ்ரிவால், துணை முதல்வர் சிசோடியா மற்றும் அமைச்சர்கள் சத்யேந்தர் ஜெயின் மற்றும் கோபால் ராய் கடந்த 3 நாட்களாக சத்யாகிரஹா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அவர்களுக்காக துணைநிலை ஆளுநர் 3 நிமிடங்கள் கூட ஒதுக்கவில்லை. 3 மக்களவை உறுப்பினர்களுடன் நானும் சந்திக்க முறையிட்டேன். ஆனால், எங்களுக்கும் அவர் நேரம் ஒதுக்கவில்லை.

நானும், தில்லி மற்றும் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரை சந்தித்து தில்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் போராட்டத்தை குறித்து முறையிடப்போகிறோம்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com