முன்பதிவில்லாத டிக்கெட்டுகளுக்காக செல்லிடப்பேசி செயலி

முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை பெறுவதற்காக செல்லிடப்பேசி செயலியை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.

முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை பெறுவதற்காக செல்லிடப்பேசி செயலியை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
UTSONMOBILE  என்ற செல்லிடப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் செயலியை ஆண்ட்ராய்டு, விண்டோஸ் ஆகிய இயங்குதளங்கள் உள்ள செல்லிடப்பேசிகளில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
செயலியைப் பதிவிறக்கம் செய்தவுடன், செல்லிடப்பேசி எண், பெயர், நகரம் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அந்தச் செயலியில் பணத்தையும் பரிமாற்றம் செய்து வைத்துக் கொள்ளலாம். இதில் நடைமேடை டிக்கெட், சீசன் டிக்கெட்டுகளை புதுப்பித்துக் கொள்ளுதல், முன்பதிவில்லா டிக்கெட்டுகளை எடுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். 
WWW.UTSONMOBILE.INDIANRAIL.GOV.IN  என்ற இணையதளத்தின் வாயிலாக செயலியில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். காகித வடிவில் இல்லாமல் செயலியில் இருக்கும் டிக்கெட்டை பயன்படுத்தலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com