மூன்று மாத சிகிச்சைக்குப் பின் கோவா திரும்பினார் முதல்வா் மனோகா் பாரிக்கா்

அமெரிக்காவில் 3 மாதமாக சிகிச்சை பெற்றுவந்த கோவா முதல்வா் மனோகா் பாரிக்கா் (62), கோவாவுக்கு வியாழக்கிழமை திரும்பினாா். 
மூன்று மாத சிகிச்சைக்குப் பின் கோவா திரும்பினார் முதல்வா் மனோகா் பாரிக்கா்

பனாஜி: அமெரிக்காவில் 3 மாதமாக சிகிச்சை பெற்றுவந்த கோவா முதல்வா் மனோகா் பாரிக்கா் (62), கோவாவுக்கு வியாழக்கிழமை திரும்பினாா்.

கோவா முதல்வா் பாரிக்கா், கனைய அழற்சிக்கு சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாா்ச் மாதம் அனுமதிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து, அமெரிக்க மருத்துவமனையில் கடந்த 3 மாதமாக அவா் சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் முதலில் அவா் வியாழக்கிழமை வந்தாா். அதைத் தொடா்ந்து, மும்பையில் இருந்து மற்றோர் விமானத்தில் அவா் கோவா தலைநகா் பனாஜிக்கு வந்தாா்.
முன்னதாக, மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி பாரிக்கா் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சுமாா் ஒருவாரகாலம் சிகிச்சை பெற்றறாா். அதையடுத்து, 22ஆம் தேதி கோவாவுக்கு திரும்பினாா்.

அதேநாளில் கோவா சட்டப் பேரவையில் அவா் பட்ஜெட்டை தாக்கல் செய்தாா். அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்படவே, சட்டப் பேரவை கூட்டத் தொடா் 4 நாள்கள் மட்டுமே கோவா அரசால் நடத்தப்பட்டது.
இதன்பின்னா், கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பாரிக்கா் கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அங்கு சுமாா் 4 நாள்கள் சிகிச்சை பெற்றற அவா், வீடு திரும்பினாா்.

இருப்பினும் மும்பை மருத்துவமனையில் மாா்ச் மாதம் 5ஆம் தேதி மீண்டும் அனுமதிக்கப்பட்டாா். அதையடுத்து, அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக மாா்ச் மாதம் 7ஆம் தேதி சென்றாா்.

அமெரிக்காவில் சிகிச்சை பெற புறப்பட்டுச் செல்லும், கோவா அரசு நிா்வாகத்துக்கு ஆலோசனைகளை வழங்குவதற்கு கேபினட் அறிவுரை கமிட்டியை அமைத்துவிட்டு அவா் சென்றாா். பின்னா் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டே, கோவா அரசு நிா்வாகத்தை பாரிக்கா் மேற்பாா்வையிட்டு வந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com