கிணற்றில் குதித்து விளையாடியதற்காக தலித் சிறுவர்களை அடித்து துன்புறுத்திய கொடூரச் செயல்!

மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த ஈஸ்வர் ஜோஷி மற்றும் அவரது உதவியாளர் பிரஹலாத் லோஹர் ஆகிய இருவரும்,
கிணற்றில் குதித்து விளையாடியதற்காக தலித் சிறுவர்களை அடித்து துன்புறுத்திய கொடூரச் செயல்!

மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த ஈஸ்வர் ஜோஷி மற்றும் அவரது உதவியாளர் பிரஹலாத் லோஹர் ஆகிய இருவரும், 14 வயது நிரம்பிய தலித் சிறுவர் இருவரையும் 8 வயது சிறுவன் ஒருவனையும் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குதித்து விளையாடியதற்காக கடுமையாக தண்டித்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் ஜால்கான் மாவட்டத்திலுள்ள வகாதி எனும் கிராமத்தைச் சேர்ந்த இச்சிறுவர்களை நிர்வாணப்படுத்தி, ஊர்வலமாக நடக்கச் செய்து, இருவரையும் அடித்து துன்புறுத்தியதுடன் அதனை விடியோ எடுத்துள்ளனர். தங்கள் உடலை இலை தழைகளால் மறைத்துக் கொண்டு சிறுவர்கள் கெஞ்சியபடி கதறி அழுத போதும், சிறிதும் இரக்கமின்றி சிறுவர்களை கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்த விடியோ காட்சி வலைத்தளங்களில் பரவி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தைக் கண்டித்து அந்த விடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள குஜராத் எம்.எல்.ஏ மற்றும் தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி, 'உனாவில் நிகழ்ந்தது இப்போது மகாராஷ்டிராவிலும் நடந்துவிட்டது. தலித் அல்லாதவர்களின் கிணற்றில் குளித்ததற்காக தலித் சிறுவர்கள் தாக்கப்பட்டு அவமானப் படுத்தப்பட்டிருக்கிறார்கள். உனாவில் பாதிக்கப்பட்டர்வர்களுக்கு நீதி கிடைத்திருந்தால், மஹாராஷ்டிராவில் இச்சம்பவம் நிகழ்ந்திருக்காது’ என பதிவிட்டுள்ளார்.

சமூக நீதித் துறை அமைச்சர் திலீப் காம்பிளே இந்த சம்பவத்தைப் பற்றி ஜால்கான் போலீஸாரிடம் பேசியுள்ளார். இது போன்ற சம்பவங்கள் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அவர் கூறினார். மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கூறுகையில், 'பிஜேபி ஆட்சியின் கீழ், தலித்துகளுக்கு எதிரான கொடூரச் செயல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன’ என்றார். மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் அப்துல் சதார் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உல்லாஸ் பாட்டீல் தலைமையில் உண்மையைக் கண்டறியும் உயர்நிலை குழுவொன்று ஜால்கானுக்கு இன்று புறப்படுகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com