தில்லியில் அபாயகரமான அளவுக்கு அதிகரித்த காற்று மாசு: மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை 

தில்லியில் அபாயகரமான அளவுக்கு காற்று மாசு அதிகரித்த காரணத்தால், பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தில்லியில் அபாயகரமான அளவுக்கு அதிகரித்த காற்று மாசு: மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை 

புதுதில்லி: தில்லியில் அபாயகரமான அளவுக்கு காற்று மாசு அதிகரித்த காரணத்தால், பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் தலைநகர் தில்லியில் அவ்வப்போது புழுதிப்புயல் வீசுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். புழுதிப்புயல் காரணமாக வியாழன் அன்றும் அங்கு காற்றில் மாசு அதிகமாக இருந்தது. மேலும் தொடர்ந்து 3 அல்லது 4 நாட்களுக்கு புழுதிப்புயல் வீசும் என முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் திறந்த வெளி பகுதியில் அதிக நேரம் இருப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது.

இதுதொடர்பாக தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் வியாழன் அன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து, காற்றில் அதிக அளவில் மாசு கலப்பதை தடுக்க தில்லியில் கட்டிடங்களின் கட்டுமான பணிகளை வருகிற 17-ந் தேதி வரை நிறுத்தி வைக்குமாறு அவர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் ராஜஸ்தானில் இருந்து வீசி வரும் புழுதிப் புயல் காற்றால் தில்லி முழுவதும் பரவலாக காற்று மாசு அதிகரித்துள்ளது. இதன்காரணமாக மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com