பேறுகால விடுப்பு: ஆண்களுக்கு சலுகை காட்டாத நாடுகளின் பட்டியலில் இந்தியா

இந்தியா உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட நாடுகள், பிரசவ காலத்தின்போது ஆண்களுக்கு விடுமுறை அளிப்பதில்லை என்று யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.
பேறுகால விடுப்பு: ஆண்களுக்கு சலுகை காட்டாத நாடுகளின் பட்டியலில் இந்தியா

இந்தியா உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட நாடுகள், பிரசவ காலத்தின்போது ஆண்களுக்கு விடுமுறை அளிப்பதில்லை என்று யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
உலகின் ஒட்டு மொத்த குழந்தைகளில் மூன்றில் இரண்டு பங்கு பேர், ஒரு வயதுக்கும் குறைவான பச்சிளம் குழந்தைகள் ஆவர். ஆனால், பல நாடுகளில் பிரசவ காலத்தின்போது அந்தக் குழந்தைகளின் தந்தைக்கு ஒரு நாள் கூட ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுவதில்லை.
40 லட்சம் குழந்தைகளைக் கொண்ட அமெரிக்கா உள்பட 8 நாடுகளில், பிரசவ காலத்தில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுவதில்லை.
அதிக குழந்தைகளைக் கொண்ட இந்தியா, நைஜீரியா உள்ளிட்ட 92 நாடுகளில், பிரசவ காலத்தின்போது ஆண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும் கொள்கை கிடையாது. 
எனினும், பிரசவ காலத்தின்போது ஆண்களுக்கு விடுமுறை அளிக்கும் நடைமுறை உலக நாடுகளிடம் பரவி வருகிறது. குறிப்பாக, இந்தியாவில், ஆண்களுக்கு 3 மாதங்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வகைச் செய்யும் மசோதா, அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது. 
பிரேசில் காங்கோ உள்ளிட்ட சில நாடுகளில் பிரசவ காலத்தில் ஆண்களுக்கு விடுமுறை அளிக்கும் கொள்கை நடைமுறையில் உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து யுனிசெஃப் அமைப்பின் இயக்குநர் ஹென்ரிட்டா ஃபோர் கூறியதாவது:
பச்சிளம் குழந்தைகளிடம் தாயும், தந்தையும் ஆக்கப்பூர்வமாகக் கலந்துரையாடுவது, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. 
மேலும், குழந்தைகள் மிகழ்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதுடன், அவர்களின் கற்கும் திறனும், புரிந்துகொள்ளும் திறனும் அதிகரிக்கிறது. 
எனவே, சிறார்களின் நலனைக் கருத்தில் கொண்டு, குழந்தைகள் தங்கள் தந்தையுடன் இருப்பதை உறுதிசெய்வதற்காக, ஆண்களுக்கும் பிரசவ கால விடுப்பு வழங்க வேண்டும் என்று உலக நாடுகளை யுனிசெஃப் வலியுறுத்தி வருகிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com