புல்லட் ரயில் திட்டத்தை அனுமதிக்க மகாராஷ்டிர கிராம மக்கள் நிபந்தனை

புல்லட் ரயில் திட்டத்துக்கு நிலம் வழங்க வேண்டும் என்றால் தங்கள் பகுதிக்கு சோலார் தெருவிளக்கு, உரிய மருந்துகள், மருத்துவர், ஆம்புலன்ஸ், புதிய குளங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மக
புல்லட் ரயில் திட்டத்தை அனுமதிக்க மகாராஷ்டிர கிராம மக்கள் நிபந்தனை

புல்லட் ரயில் திட்டத்துக்கு நிலம் வழங்க வேண்டும் என்றால் தங்கள் பகுதிக்கு சோலார் தெருவிளக்கு, உரிய மருந்துகள், மருத்துவர், ஆம்புலன்ஸ், புதிய குளங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்ட கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மும்பை-ஆமதாபாத் இடையே இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜப்பான் உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி செலவில் 508 கி.மீ. தொலைவுக்கு புல்லட் ரயிலுக்கான பாதை அமைக்கப்படவுள்ளது.
இதில் 110 கி.மீ. ரயில் பாதை, பால்கர் மாவட்டத்தில்தான் அமைகிறது. இதற்காக 73 கிராமங்களில் இருந்து 300 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த வேண்டியுள்ளது. இதனால் 3,000 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, இத்திட்டத்துக்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கடந்த செப்டம்பரில் புல்லட் ரயில் திட்டத்தை பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் தொடங்கி வைத்த அன்றே பால்கர் மாவட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், விவசாயிகளை சமாதானப்படுத்தி, அவர்களுக்கு மாற்று இடம் மற்றும் வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்தித் தரும் பேச்சுவார்த்தையில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஆனால், விவசாயிகள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.
இதையடுத்து, புல்லட் ரயில் திட்டத்துக்காக நிலம் வழங்க உள்ள நில உரிமையாளர்கள் மற்றும் கிராமத் தலைவர்களை அதிகாரிகள் சந்தித்து வருகின்றனர். நிலத்தை கையகப்படுத்த கூடுதல் பணம் அளிப்பதுடன், அவர்கள் பகுதியில் வேண்டிய வசதிகளை செய்து தருவதாகும் வாக்குறுதி அளித்து அதிகாரிகள் பேச்சு நடத்தியுள்ளனர்.
இதன்படி பல்வேறு கிராமங்களில் இருந்து கோரிக்கைகளை அதிகாரிகள் பெற்றுள்ளனர். அதில், பெரும்பாலானவை தனிப்பட்ட கோரிக்கையாக இல்லாமல், கிராம நலன் சார்ந்த கோரிக்கைகளாக உள்ளன. தங்கள் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் சோலார் மின் விளக்கு வேண்டும், தங்கள் பகுதி கிராம மருத்துவமனைகளில் அனைத்து மருந்துகளும் கிடைக்கச் செய்ய வேண்டும். அதிக மருத்துவர்களை பணியமர்த்துவதுடன் போதிய ஆம்புலன்ஸ் வசதியும் வேண்டும். நீர்பாசனத்துக்காக புதிய குளங்களை அமைத்துத் வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இவை எல்லாவற்றுக்கும் மேலாக தங்கள் பகுதியில் புல்லட் ரயில் நின்று செல்ல வேண்டும் என்று ஒரு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com