இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் 3ஆவது நாட்டின் தலையீட்டுக்கு இடமில்லை: வெளியுறவுத் துறை அமைச்சகம்

இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் தொடர்பான விவகாரங்கள், இரு நாடுகள் மட்டுமே சம்பந்தப்பட்டவை ஆகும். இதில் 3ஆவது நாட்டின்

இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் தொடர்பான விவகாரங்கள், இரு நாடுகள் மட்டுமே சம்பந்தப்பட்டவை ஆகும். இதில் 3ஆவது நாட்டின் தலையீட்டுக்கு இடமில்லை' ' என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
தில்லியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான சீனத் தூதர் லோ சாங்குயி பேசியபோது, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா-சீனா-பாகிஸ்தான் ஆகிய 3 நாடுகளும் அங்கம் வகிப்பதை சுட்டிக்காட்டி, இந்த அமைப்பின்கீழ் 3 நாடுகளும் ஒத்துழைப்பை அதிகரித்து கொள்ள வேண்டும்; அப்படி செய்வது, இந்தியா, பாகிஸ்தான் இடையேயான விவகாரங்களுக்கு தீர்வு காண உதவியாக இருக்கும் என்றார்.
இதுகுறித்து தில்லியில் உள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு ரவீஷ் குமார் பதிலளிக்கையில், சீன தூதர் இதுபோல் தெரிவித்ததாக செய்திகள் மூலமே தெரிந்து கொண்டோம். சீன அரசிடம் இருந்து அதுபோல் எந்த யோசனையும், இந்தியாவுக்கு வரவில்லை. சீனத் தூதரின் தனிப்பட்ட கருத்தாகவே அதை கருதுகிறோம். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான விவகாரங்கள் அனைத்தும், இருநாடுகள் சம்பந்தப்பட்டவை ஆகும். இதில் 3ஆவது நாட்டின் தலையீட்டுக்கு இடமில்லை' என்றார்.
காங்கிரஸ் கண்டனம்: இதனிடையே, காங்கிரஸ் கட்சியும், சீனத் தூதரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறுகையில், சீனத் தூதரின் கருத்தை காங்கிரஸ் கடுமையாக கண்டிக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அனைத்து விவகாரங்களுக்கும், சிம்லா ஒப்பந்தப்படியே தீர்வு காணப்பட வேண்டும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com