நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டது மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

நாட்டின் பொருளாதாரத்தை மோடி அரசு சீரழித்துவிட்டது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டது மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

நாட்டின் பொருளாதாரத்தை மோடி அரசு சீரழித்துவிட்டது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் தீவாரி இது தொடர்பாக கூறியதாவது:
இப்போது நாட்டின் நிதியமைச்சர் யார் என்பதே தெரியவில்லை. பிரதமர் அலுவலக அமைச்சக இணையதளத்தில் நிதியமைச்சராக ஒருவரது (பியூஸ் கோயல்) பெயரும், நிதியமைச்சக இணையதளத்தில் மற்றொருவரது (அருண் ஜேட்லி) பெயரும் உள்ளது. இருவருமே நாட்டின் நிதி நிலை, பொருளாதாரப் பிரச்னைகள் குறித்து பேட்டியளித்து வருகின்றனர். இவர்களில் யார் நிதியமைச்சர் என்பதை நாட்டு மக்களுக்கு பரிதமர் தெளிவுபடுத்த வேண்டும். 
கடந்த 2014-இல் பாஜக மத்தியில் ஆட்சியில் அமைத்ததில் இருந்து பொருளாதாரம் சரிவுப் பாதையில்தான் பயணிக்கிறது. கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்த வலுவான அடித்தளம்தான் நமது பொருளாதாரம் பெரும் வீழ்ச்சிக்கு செல்லாமல் இப்போதும் தடுத்து வருகிறது. இது தெரியாமல் மத்திய ஆட்சியாளர்கள் தாங்கள் சாதித்துவிட்டதாக பேசி வருகிறார்கள்.
பிரதமர் மோடிக்கு சமூக ஏற்றத்தாழ்வுக்கும், பொருளாதார முன்னேற்றத்துக்குமான வேறுபாட்டை புரிந்து கொள்ள முடியவில்லை. அவை இரண்டும் ஒன்றாகப் பயணிக்க முடியாது என்பதுதான் உண்மை. நாட்டில் குறிப்பிட்ட சிலரை பணக்காரர்களாக்கியும், பெரும் பகுதி மக்களை வறுமையில் தள்ளியும் பொருளாதாரம் வளர்ந்துவிட்டதாகக் கூறுவதுதான் உண்மையான வளர்ச்சியா என்பதை ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும்.
2009-இல் சர்வதேச அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோதும், இந்தியாவில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியது காங்கிரஸ் கூட்டணி அரசு. ஆனால் இந்த அரசு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்குவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிகாலம் முடிவை நெருங்கும் நிலையில், இதுவரை 2.5 லட்சம் வேலைவாய்ப்புகளைக் கூட ஏற்படுத்தவில்லை என்பதுதான் உண்மை என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com