இந்தியாவுடன் வர்த்தக வாய்ப்பு அதிகரித்துள்ளது: பிரிட்டன் வர்த்தக அமைச்சர்

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியுள்ளதால், இந்தியாவுடனான வர்த்தக வாய்ப்புகள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக பிரிட்டன் நாட்டின் சர்வதேச வர்த்தகத் துறை

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியுள்ளதால், இந்தியாவுடனான வர்த்தக வாய்ப்புகள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக பிரிட்டன் நாட்டின் சர்வதேச வர்த்தகத் துறை அமைச்சர் லியம் ஃபாக்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் பிரிட்டன்-இந்தியா கூட்டு பொருளாதார, வர்த்தக குழு கூட்டம் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதில் பிரிட்டன் சார்பில் லியம் ஃபாக்ஸ் தலைமையிலான குழு பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில், லண்டன் தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற இந்திய-பிரிட்டன் உறவு குறித்த புத்தக வெளியிட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற லியம் ஃபாக்ஸ் கூறியதாவது:
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு, இந்தியாவுடனான வர்த்தக வாய்ப்புகள் பெருமளவில் அதிகரித்துள்ளன. 
ஏனெனில், இரு நாடுகள் இடையே வர்த்தகம் தொடர்பாக இருந்த பல்வேறு கட்டுப்பாடுகளும், தடைகளும் நீங்கியுள்ளன. இந்தியா- பிரிட்டன் இணைந்து பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, சர்வதேச வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்க முடியும்.
தொழிநுட்பம், ஏற்றுமதி, தகவல் தொழில்நுட்பம், கல்வி, மனிதவள மேம்பாடு என பல்வேறு துறைகளில் இந்தியாவும், பிரிட்டனும் இணைந்து சாதிக்க பல்வேறு வாய்ப்புகள் உள்ளன என்றார்.
இந்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா, பிரிட்டனுக்கான இந்தியத் தூதர் ஒய்.கே.சின்ஹா, பிரிட்டன் கலாசாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மேட் ஹான்கோக் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்திய-பிரிட்டன் தொழிலதிபர்கள் மாநாடு லண்டனில் புதன்கிழமை (ஜூன் 20) தொடங்கி இரு நாள்கள் நடைபெறவுள்ளது. 
இதில் இரு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்கின்றனர். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகிவிட்ட நிலையில், அந்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள வர்த்தக, தொழில் வாய்ப்புகள் குறித்து இந்த மாநாட்டில் விரிவாக ஆலோசிக்கப்பட இருக்கிறது. 
இந்திய தொழில் வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி), இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ,) இன்ஃபோசிஸ், ஓலா, சர்வதேச முதலீட்டாளர் கூட்டமைப்பு, இளம் தொழிலதிபர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com