ஐரோப்பிய யூனியனுடன் பெரிய அளவிலான வர்த்தக ஒப்பந்தம்

ஐரோப்பிய யூனியனுடன் பெரிய அளவிலான வர்த்தகம், முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
ஐரோப்பிய யூனியனுடன் பெரிய அளவிலான வர்த்தக ஒப்பந்தம்

ஐரோப்பிய யூனியனுடன் பெரிய அளவிலான வர்த்தகம், முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
28 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய யூனியன், இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக கூட்டாளியாக திகழ்ந்து வருகிறது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸுக்கு ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை சென்றார். கிரீஸ் தலைநகர் ஏதன்ஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியதாவது:
ஐரோப்பிய யூனியன் நாடுகளில் மருந்து, ஆட்டோமொபைல் துறைகளில் இந்தியா முதலீடு செய்து வருகிறது. அந்த நாடுகளுடன் பெரிய அளவில் வர்த்தகமும், முதலீடும் செய்ய இந்தியா உறுதிபூண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை செய்துகொள்ள கடந்த 2013-ஆம் ஆண்டு மே மாதம் முதல் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சில பிரச்னைகளை களைந்தால் ஒப்பந்தம் இயற்றப்படும்.
ஒப்பந்தம் செய்துகொள்வது தொடர்பாக கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் இதுவரை 16 சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அறிவுசார் சொத்துரிமைகள், ஆட்டோமொபைல், பால் பொருட்கள் உள்ளிட்டவற்றில் வரி குறைப்பு செய்யப்பட வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் விரும்புகிறது. தகவல் பாதுகாப்பை உறுதி செய்யும் நாடாக இந்தியாவை ஐரோப்பிய யூனியன் அங்கீகரிக்க வேண்டும். 
வேளாண்மை, சுற்றுலா, உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த ஐரோப்பிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று ராம்நாத் கோவிந்த் பேசினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com