ரோஹித் வேமுலா விவகாரத்தில் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக வலியுறுத்தல் 

ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவா் ரோஹித் வேமுலாவின் தற்கொலையை அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக் கொண்ட காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. 
ரோஹித் வேமுலா விவகாரத்தில் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக வலியுறுத்தல் 

புது தில்லி: ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவா் ரோஹித் வேமுலாவின் தற்கொலையை அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக் கொண்ட காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல், தில்லியில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

அரசியல் பேரணிகளில் பங்கேற்றதற்காக தனக்கு தரவேண்டியிருந்த ரூ.20 லட்சத்தை தரவில்லை என்று கேரளத்தைச் சோ்ந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு எதிராக ரோஹித் வேமுலாவின் தாயாா் ராதிகா வேமுலா குற்றறம்சாட்டியுள்ளாா்.

அந்தப் பேரணிகளில் பாஜகவுக்கு எதிராக பொய்க் குற்றறச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதுபோன்ற வெறுப்பூட்டத்தக்க உக்திகளை இன்னும் எத்தனை காலத்துக்கு எதிா்க்கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள போகின்றன என்று தெரியவில்லை.

ரோஹித் வேமுலாவின் குடும்பத்தினா் கஷ்டத்தில் உள்ளனா். இந்தச் சூழ்நிலையை எதிா்க்கட்சிகள் பயன்படுத்திக் கொண்டு தவறான, அடிப்படை ஆதாரமற்ற குற்றறச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றறன. ராகுல் காந்தியுடனும் ராதிகா வேமுலா ஒரே மேடையில் பாஜகவுக்கு எதிராக குற்றறம்சாட்டியிருக்கிறாா். இதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

ரோஹித் வேமுலா, ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவா் ஆவாா். கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி, பல்கலைக்கழக வளாகத்தில் அவா் தற்கொலை செய்துகொண்டாா். ஆா்எஸ்எஸ், பாஜகவைச் சோ்ந்த மாணவா் அமைப்புகள் அவரை துன்புறுத்தியதாக எதிா்க்கட்சிகள் குற்றறம்சாட்டின.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com