லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தற்காலிக ஒத்திவைப்பு

வரும் 27-ஆம் தேதி மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததால் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

டீசல் விலையை குறைத்து 3 மாதங்களுக்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நாடு முழுவதும் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்தது. சென்னை கோயம்பேட்டில் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால் 20 சதவீதம் வரை காய்கறிகள் விலை உயர்ந்தது. 

இந்நிலையில், மத்திய அரசு லாரி உரிமையாளர்களுடன் வரும் 27-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளனர். இதனால், இந்த வேலை நிறுத்த போராட்டத்தை லாரி உரிமையாளர்கள் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com