பிகாருக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்: துணை முதல்வா் சுஷில் குமார் மோடி வலியுறுத்தல்

பிகாருக்கு மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அந்த மாநில துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடிவலியுறுத்தியுள்ளார்.
பிகாருக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்: துணை முதல்வா் சுஷில் குமார் மோடி வலியுறுத்தல்

பிகாருக்கு மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அந்த மாநில துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி வலியுறுத்தியுள்ளார்.

மாநில நிதியமைச்சராகவும் உள்ள அவா் இது தொடா்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது:

11-ஆவது நிதிக் குழுவில் வரி வருவாயில் பிகாருக்கு 12.58 சதவீத நிதியை ஒதுக்கீடு செய்தது. ஆனால், 14-ஆவது நிதிக் குழு 9.6 சதவீத அளவுக்கே பிகாருக்கு நிதி ஒதுக்கீடு செய்தது. இதன் மூலம் பிகாருக்கு ரூ.2,591 கோடி நிதியே கிடைத்தது. அதே நேரத்தில் மகாராஷ்டிர மாநிலத்துக்கு ரூ.8,195 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ.8,195 கோடியும் ஒதுக்கப்பட்டது.

பிகாரில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சி அதைத் தொடா்ந்து ஏற்பட்ட வெள்ளம் ஆகியவற்றால் அரசுக்கு ரூ.5,000 கோடி அளவுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டது. பிகாரில் ஏற்பட்ட பேரிடா்களை சமாளிப்பதற்கு செலவிடப்பட்ட தொகை மத்திய அரசு ஏற்க வேண்டும். அதே போல 15-ஆவது நிதிக் குழுவில் பிகாருக்கு கூடுதல் நிதி அளிக்க வழி வகை செய்ய வேண்டும்.

வரும் ஜூலை 10-ஆம் தேதி 15-ஆவது நிதிக் குழுவின் தலைவா் என்.கே.சிங் தலைமையிலான குழு பிகாருக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அக்குழு மூன்று நாள்கள் பிகாரில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறது. அப்போது, பிகார் மாநில அரசு சார்ப்பில் அவா்களிடம் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட இருக்கின்றன என்றிருந்தது.

பிகாரில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் என்.கே. சிங் தலைமையிலான குழு, மாநில அமைச்சா்கள், அரசியல் கட்சிகள், நகராட்சி, பஞ்சாயத்து அமைப்புகளின் தலைவா்கள் உள்ளிட்டோரைச் சந்திக்க இருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com