பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

மாவோயிஸ்ட் தீவிரவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு விட்டதாக மத்திய
பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு


மாவோயிஸ்ட் தீவிரவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு விட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநில போலீஸாரால் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தற்கொலைப்படை தீவிரவாதி மூலம் படுகொலை செய்யப்பட்டது போல், பிரதமர் நரேந்திர மோடியை மாவோயிஸ்டுகள் கொலை செய்யத் திட்டமிட்டிருக்கும் தகவல் தெரிய வந்தது. இதையடுத்து, நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தில்லியில் தி வீக்' பத்திரிகைக்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு: யார் அவருக்கு எதிராக திட்டமிட்டனர், அந்தத் திட்டத்தின் நிலை என்ன என்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. பிரதமரின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய நான் ஏற்கெனவே குழு அமைத்திருந்தேன். அது தனது பணியை தொடர்ந்து செய்து வருகிறது. அதேநேரத்தில், மாவோயிஸ்டுகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானதும், அவருக்கான பாதுகாப்பை நாங்கள் அதிகரித்து விட்டோம். தனக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பாக என்னுடன் மோடி எதுவும் பேசவில்லை. ஆனால், நாட்டின் உள்துறை அமைச்சர் என்ற முறையில், அவருக்கான பாதுகாப்பை அதிகரிக்க நான் நடவடிக்கை எடுத்தேன்.
அவர் நமது நாட்டின் பிரதமர் ஆவார். அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது நமது பொறுப்பு ஆகும் என்றார் ராஜ்நாத் சிங்.
நாட்டில் ஹிந்தி மொழியை திணிக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு, இந்தியா பன்மொழி கொண்ட நாடாகும்; எங்களால் எந்த மொழியையும் திணிக்க முடியாது' என்று ராஜ்நாத் சிங் பதிலளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com