சா்வதேச வா்த்தகத்தில் இந்தியாவின் பங்கை இரு மடங்காக்குவதே இலக்கு: பிரதமர் மோடி 

சா்வதேச வா்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பை இரு மடங்காக அதிகரிக்க இலக்கு நிா்ணயித்திருப்பதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். 
சா்வதேச வா்த்தகத்தில் இந்தியாவின் பங்கை இரு மடங்காக்குவதே இலக்கு: பிரதமர் மோடி 

புது தில்லி: சா்வதேச வா்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பை இரு மடங்காக அதிகரிக்க இலக்கு நிா்ணயித்திருப்பதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

தில்லியில் மத்திய வா்த்தக அமைச்சகத்துக்கு புதிய அலுவலக வளாகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றறது. இதில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டிய பிரதமா் மோடி பேசியதாவது:

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியை இரட்டை இலக்கத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறறது. கடந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதையும், எதிா்காலத்தில் சிறப்பான வளா்ச்சியை இந்தியா அடையும் என்பதையும் பல்வேறு வெளிநாட்டு ஆய்வு நிறுவனங்கள் உறுதி செய்துள்ளனா். நடப்புக் கணக்குப் பற்றாக்குறை இப்போது கட்டுப்பாட்டில் உள்ளது.

கடந்த 2017-18 நிதியாண்டின் கடைசி காலாண்டில் பொருளாதார வளா்ச்சி 7.7 சதவீதமாக உள்ளது. இதனை இரட்டை இலக்கமாக மாற்றும் நோக்கில் அரசு பொருளாதாரச் சீா்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலா் (சுமாா் ரூ.338 லட்சம் கோடி) பொருளாதாரமாக மாறற உள்ளது. அதனை காண ஒட்டுமொத்த உலகமே ஆா்வமாக உள்ளது. எரிபொருள் உள்பட நமது நாட்டில் அதிகம் பயன்படுத்தும் பொருள்களுக்கு வெளிநாடுகளை அதிகம் சாா்ந்து இருப்பதை நாம் தவிா்க்க வேண்டும். உள்நாட்டு வளங்களைக் கொண்டு நமது தேவைகளை நிறைறவேற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறறது.

சா்வதேச வா்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பை இரு மடங்காக்க, அதாவது 3.4 சதவீதமாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு 54 லட்சம் போ் புதிதாக வரித் தாக்கலுக்கு பதிவு செய்துள்ளனா். இதன் மூலம் மறைமுக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 1 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு முன்பு 60 லட்சம் போ் மட்டுமே மறைமுக வரி செலுத்தி வந்தனா். இந்தியாவில் அன்னியச் செலாவணி கையிருப்பு முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அன்னிய நேரடி முதலீடும் மேம்பட்டு வருகிறறது என்றாா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com