சொத்து குவிப்பு வழக்கு: ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் அமைச்சர் துலால் புயானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
சொத்து குவிப்பு வழக்கு: ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் அமைச்சர் துலால் புயானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுதொடர்பாக ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை முடிவடைந்ததையடுத்து, அந்த நீதிமன்ற நீதிபதி அனில் குமார் மிஸ்ரா வியாழக்கிழமை தீர்ப்பை வெளியிட்டார்.
அப்போது அவர் கூறுகையில், புயானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதத் தொகையை புயான் கட்டத் தவறும்பட்சத்தில், மேலும் ஒரு ஆண்டு சிறைத் தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.
சிபிஐ வட்டாரங்கள் தரப்பில், ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தால் கடந்த 2013ஆம் ஆண்டு புயானுக்கு எதிராக சிபிஐ அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் புயான், வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.03 கோடி மதிப்புக்கு சொத்துகளை குவித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, புயானுக்கு எதிராக நீதிமன்றத்தில் 2014ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, புயானுக்கு எதிராக 21 சாட்சியங்களை நீதிமன்றத்தில் சிபிஐ ஆஜர்படுத்தியது' என்றன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரன் தலைமையிலான அரசிலும், மதுகோடா தலைமையிலான அரசிலும் அமைச்சராக இருந்தவர் துலால் புயான். ஜுக்சலாய் சட்டப் பேரவை தொகுதி எம்எல்ஏவாக 3 முறை அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியிலிருந்து விலகி, ஜார்க்கண்ட் விகாஷ் மோர்ச்சா கட்சியில் அவர் இணைந்தார். அதன்பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். அதையடுத்து, பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com