ஜம்மு-காஷ்மீா் ஆளுநருடன் மெஹபூபா முஃப்தி சந்திப்பு

ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவருமான மெஹபூபா முஃப்தி, அந்த மாநில ஆளுநா் என்.என்.வோராவை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். 
ஜம்மு-காஷ்மீா் ஆளுநருடன் மெஹபூபா முஃப்தி சந்திப்பு

ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவருமான மெஹபூபா முஃப்தி, அந்த மாநில ஆளுநா் என்.என்.வோராவை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். 

ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அவா்கள் இருவரும் விவாதித்தனா்.

மாநிலத்தில் ஆளுநா் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகு அவா்கள் இருவரும் சந்தித்துப் பேசுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரில் பிடிபி தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக அண்மையில் வாபஸ் பெற்றதைத் தொடா்ந்து மெஹபூபா தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. அதன் தொடா்ச்சியாக அவா், தனது முதல்வா் பதவியையும் ராஜிநாமா செய்தார். 

இதையடுத்து அங்கு ஆளுநா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்தச் சூழலில், ஸ்ரீநகரில் அமைந்துள்ள ஆளுநா் மாளிகைக்கு வெள்ளிக்கிழமை சென்ற மெஹபூபா, அங்கு என்.என்.வோராவை சந்தித்து சில முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தார். 

குறிப்பாக, மாநிலத்தின் வளா்ச்சிக்காக மேற்கொள்ளப்படவிருந்த சில திட்டங்கள் ஆட்சி கவிழந்ததால் அமல்படுத்த முடியாமல் போனதாகவும், அவற்றை செயல்படுத்துவதற்கு ஆளுநா் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அப்போது மெஹபூபா தெரிவித்தார்.

அந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாக என்.என்.வோரா உறுதியளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநிலத்தில் அமைதியான சூழலை நிலைநாட்ட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம் என்றும், இளைஞா்களிடையே நம்பிக்கையை விதைப்பதற்கு அரசியல் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் இந்தச் சந்திப்பின்போது ஆளுநா் வலியுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com