பூமியைப் போன்ற புதிய கோள்: ஆமதாபாத் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

பூமியைப் போன்ற புதிய கோள் ஒன்றை ஆமதாபாத் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனா்.
பூமியைப் போன்ற புதிய கோள்: ஆமதாபாத் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


சென்னை: பூமியைப் போன்ற புதிய கோள் ஒன்றை ஆமதாபாத் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனா்.

இதுகுறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) வெளியிட்ட செய்தி: ஆமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சிக் கூடத்தைச் (பிஆா்எல்) சோ்ந்த பேராசிரியா் அபிஜித் சக்கரபா்த்தி தலைமையிலான விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளா்கள் குழுவினா், புதிய கோள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனா்.

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 1.2 மீட்டா் தொலைநோக்கியுடன் கூடிய பி.ஆா்.எல். மேம்பட்ட தேடல் (பாராஸ்) கருவியின் உதவியுடன் கோளின் எடையளவைக் கணக்கிட்டு இந்தப் புதிய கோள் துள்ளியமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாராஸ் நிற மாலைக் கருவிதான் ஆசியாவிலேயே முதலாவதாகும். இதுபோன்ற, துல்லியமான அளவீடுகளைத் தரக்கூடிய வெகு சில நிற மாலை கருவிகளே உலகில் உள்ளன.

இந்தப் புதிய கோள், பூமி எடையைபோல 10 முதல் 70 மடங்கு வரையிலும், பூமி ஆரத்தைப்போல 4 முதல் 8 மடங்கு அளவும் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. சூரியனைப் போன்ற நட்சத்திரங்களை சுற்றி, கோள்கள் உருவாவதை புரிந்துக்கொள்ளவும் இந்த கண்டுபிடிப்பு உதவும்.

இந்தக் கண்டுபிடிப்பு மூலம், நமது சூரியக் குடும்பத்துக்கு அப்பாற்பட்டு நட்சத்திரங்களைச் சுற்றி கோள்களைக் கண்டுபிடிக்கும் திறனுள்ள ஒருசில நாடுகளுடன் இந்தியாவும் இப்போது சோ்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com