சிறுமியின் தீரச் செயல்! குவியும் பாராட்டுக்கள்!

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறாள் பழங்குடி இனத்தினைத் சேர்ந்த 9 வயதான
சிறுமியின் தீரச் செயல்! குவியும் பாராட்டுக்கள்!

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறாள் பழங்குடி இனத்தினைத் சேர்ந்த 9 வயதுச் சிறுமி சுமதி. திரிபுராவில் தன்சேரா பகுதியில் மூங்கில் சேகரிக்கும் பணியில் சுமதியின் குடும்பத்தினருடன் ஈடுபட்டிருந்தார். 

அப்பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவு ஏற்பட்டு பல இடங்களில் கடுமையான பாதிப்பு இருந்தது. இதனை அறியாமல் தரம் நகரிலிருந்து தன்சேரா வழியாக அகர்தலாவுக்கு பயணிகள் ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இத்தகைய பாதிப்பினூடே ரயில் வருவதைப் பார்த்த சுமதி உடனடியாக தனது சட்டையைக் காட்டி ரயிலை நிறுத்த சைகை செய்தாள். நல்ல வேளையாக இதனைக் கவனித்த ரயில் ஓட்டுனர் ரயிலை உடனடியாக நிறுத்தினார். சிறுமி சுமதியின் புத்திசாலித்தனத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் பயணம் செய்தவர்கள் அனைவரும் எவ்வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பினர்.

சுமதியின் தந்தைக்கு ரயில்வே துறையில் பணி வழங்கவும், அவளது செயலை பாராட்டி, ஜனாதிபதி விருதுக்கு பரிந்துரை செய்யவும் திரிபுரா மாநில அரசு முடிவு செய்துள்ளது. பழங்குடியின சமூக நலத்துறை அமைச்சர் மேவார் குமார் ஜமாடியா சிறுமியின் தந்தையிடன் ரூ.50,000 வழங்கியுள்ளார். ரயில் விபத்தை தடுத்த சிறுமிக்கு சமூக வலை தளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com