பயோமெட்ரிக், ஆதார் இணைக்காவிட்டால் ஊதியம் நிறுத்தம்: பெங்களூரு மாநகராட்சி எச்சரிக்கை

பயோமெட்ரிக் முறை வருகைப் பதிவேட்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ஊதியம் நிறுத்தப்படும் என பெங்களூரு மாநகராட்சி எச்சரித்துள்ளது.
பயோமெட்ரிக், ஆதார் இணைக்காவிட்டால் ஊதியம் நிறுத்தம்: பெங்களூரு மாநகராட்சி எச்சரிக்கை

பயோமெட்ரிக் முறை வருகைப் பதிவேட்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ஊதியம் நிறுத்தப்படும் என பெங்களூரு மாநகராட்சி எச்சரித்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பணி மற்றும் நிதித்துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்தும் விதமாக புது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ஊழியரும் தங்களின் பயோமெட்ரிக் முறை வருகைப் பதிவேட்டுடன் ஆதார் விவரங்களை இணைக்காவிட்டால் வருகிற ஜூலை மாதம் முதல் ஊதியம் நிறுத்தப்படும். பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்தில் உள்ள ஒழுங்கீன நடவடிக்கைகளை ஒழிக்கும் விதமாக இந்த நடைமுறை எடுக்கப்பட்டுள்ளது என்றிருந்தது.

பெங்களூரு மாநகராட்சியின் அனைத்து துறைகளிலும் மொத்தம் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணி செய்து வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் ஒப்பந்த அடிப்படை ஊழியர்கள். சிலர் தற்காலிக பணியாளர்களாகவும் உள்ளனர். 

இதில் ஊழியர்களின் ஒப்பந்தம் மற்றும் பணி வழங்கல் அனைத்தும் பழைய நடைமுறைகளை கொண்டு இயங்கி வருவதால், பணி ஒழுக்கம் சீர்கேடு அடைந்துள்ளது. இதனால் மாநகராட்சி நிதித்துறையில் ஊழல் நடைபெறுகிறது. பெரும்பாலான பணிகளில் சரியான முறையில் நடைபெறுவதில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகள் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்தின் தரப்பில் இருந்து முன்வைக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com