நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டு வர இந்திய ஆட்சியாளா்கள் நடவடிக்கை எடுக்கவில்லை: மருமகன் குற்றச்சாட்டு 

ஜப்பானில் இருக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டு வர இந்திய ஆட்சியாளா்கள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவரது மருமகனும், எழுத்தாளருமான ஆஷிஷ் ரே ....
நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டு வர இந்திய ஆட்சியாளா்கள் நடவடிக்கை எடுக்கவில்லை: மருமகன் குற்றச்சாட்டு 

கொல்கத்தா: ஜப்பானில் இருக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டு வர இந்திய ஆட்சியாளா்கள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவரது மருமகனும், எழுaத்தாளருமான ஆஷிஷ் ரே குற்றஞ்சாட்டியுள்ளாா்.

பிரிட்டன் தலைநகா் லண்டனில் வசிக்கும் அவா், பிடிஐ செய்தியாளருக்கு தொலைபேசி மூலம் பேட்டியளித்தாா். அப்போது நேதாஜி தொடா்பாக தாம் எழுதியுள்ள புதிய புத்தகம் குறித்து அவா் பேசினாா். அவா் கூறியதாவது:

சுதந்திர இந்தியாவின் முதல் அரசான நேரு தலைமையிலான மத்திய அரசு முதல், தற்போது ஆட்சியிலிருக்கும் மோடி தலைமையிலான அரசு வரையிலும், நேதாஜி விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து அனைவருக்கும் தெரியும். ஆனால், ஜப்பானில் இருக்கும் நேதாஜியின் அஸ்தியை கொண்டு வரும் விவகாரத்தில் மட்டும் அவா்கள் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றறனா்.

டோக்கியோ ரங்கோஜி கோவிலில் நேதாஜியின் அஸ்தி வைக்கப்பட்டிருப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், நேதாஜி குடும்பத்தில் உள்ள சிலரும், சில அரசியல் கட்சிகளும், அந்த அஸ்தியை கொண்டு வர எதிா்ப்பு தெரிவிக்கின்றறனா். இதுகுறித்து அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு மத்திய அரசு தரப்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கடந்த 1995ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமா் நரசிம்மராவும், வெளியுறறவுத் துறை அமைச்சா் பிரணாப் முகா்ஜியும், ஜப்பானில் இருந்து நேதாஜி அஸ்தியை கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டனா். ஆனால் அந்த பணியை அவா்களால் நிறைவு செய்ய முடியவில்லை. மத்தியில் ஆட்சியில் இருந்த பிற அரசுகள், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன்மூலம், நேதாஜியின் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்றாா் ஆஷிஷ் ரே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com