பசுப் பாதுகாப்பிற்காக மதுபானங்களுக்கு 20% கூடுதல் வரி: இது ராஜஸ்தான் ரகளை 

மாநிலம் முழுதும் பசுக்களை பாதுகாப்பதற்காகவும், அதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்குவதற்கும், மதுபானங்களுக்கு 20% கூடுதல் வரி விதிக்க ராஜஸ்தான் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
பசுப் பாதுகாப்பிற்காக மதுபானங்களுக்கு 20% கூடுதல் வரி: இது ராஜஸ்தான் ரகளை 

ஜெய்ப்பூர்: மாநிலம் முழுதும் பசுக்களை பாதுகாப்பதற்காகவும், அதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்குவதற்கும், மதுபானங்களுக்கு 20% கூடுதல் வரி விதிக்க ராஜஸ்தான் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

நாட்டிலேயே முதன்முறையாக சில ஆண்டுகளுக்கு முன்னதாக ராஜஸ்தான் மாநில அரசு பசுக்களின் பாதுகாப்பிற்கு என்று தனியாக அமைச்சகம் ஒன்றை உருவாக்கியது. அதன் மூலம் பசுக்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில் மாநிலம் முழுதும் பசுக்களை பாதுகாப்பதற்காகவும், அதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்குவதற்கும், மதுபானங்களுக்கு 20% கூடுதல் வரி விதிக்க ராஜஸ்தான் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பினை மாநில நிதித்துறை வெளியிட்டுள்ளது. அதனை மாநில நிதி மற்றும் வருவாய் இணைச் செயலாளரான முகேஷ் குமார் ஷர்மா உறுதிப்படுத்தியுள்ளார். அந்த அறிவிப்பில் மாநிலத்தில் விற்கப்படும் உள்ளூர் மதுபானங்கள், அந்நிய நாட்டு மதுபானங்கள் மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்படும் அந்நிய நாட்டு மதுபானங்கள், நாட்டு மதுபானங்கள் மற்றும் பீர் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு 20% கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. இந்த வரிவிதிப்பு ஜுலை 23 முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மாநில முதல்வர் வசுந்தராவின் இந்த முடிவானது ஆர்எஸ்எஸ் மற்றும் பசு பாதுகாப்பு செயல்பாட்டாளர்களை குளிர்விக்கும் விதமாக செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com