பெண் வீட்டாரிடம் ஒடிசா பள்ளி ஆசிரியர் வரதட்சணையாக கேட்ட அந்த 1001 

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் பெண் வீட்டாரிடம் பணம் நகைகளுக்குப் பதிலாக, 1001 மரக்கன்றுகளை கேட்டுப் பெற்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பெண் வீட்டாரிடம் ஒடிசா பள்ளி ஆசிரியர் வரதட்சணையாக கேட்ட அந்த 1001 

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் பெண் வீட்டாரிடம் பணம் நகைகளுக்குப் பதிலாக, 1001 மரக்கன்றுகளை கேட்டுப் பெற்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள பாலா பகதர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சரோஜ் காந்த் பிஸ்வால் (33). பள்ளி ஆசிரியராகப் பணிபுரிகிறார். இவர் மரம் நண்பன்’ என்ற அமைப்பில் பிரசாரகராக இருக்கிறார். தனது திருமணத்தின் மூலம் மரம் வளர்ப்பை பிரபலப்படுத்த ஒரு திட்டம் தீட்டினார்.

இவர் அதே பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியை ராஷ்மிரேகாவை திருமணம் செய்ய முடிவு செய்தார். அதற்காக மணப்பெண்ணின் தந்தையிடம் பேசும் பொழுது, 'எனக்கு வரதட்சணையாக பணம், நகை வேண்டாம். திருமணத்தின் போது ஆடம்பரமாக பூ அலங்காரம், பந்தல் அலங்காரம் போன்ற ஏதுவும் தேவையில்லை. வாணவேடிக்கை வேண்டாம்; ஆனால் அதற்குப் பதிலாக 1001 மரக்கன்றுகளை வழங்கி விடுங்கள்' என்று கேட்டுக் கொண்டார்.   

அதைத் தொடர்ந்து கடந்த 22-ந்தேதி ஆசிரியர் சரோஜ் காந்த் பிஸ்வால்-ராஷ்மிரேகா திருமணம் நடந்தது. அதில் கிராம மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர். திருமணத்தின் போது தான் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி மணமகளின் தந்தை ஒரு லாரி நிறைய பழ மரக்கன்றுகளை கொண்டு வந்து மருமகன் சரோஜ் காந்த் பிஸ்வாலிடம் வரதட்சணையாக கொடுத்தார்.

அவற்றை கூடியிருந்த கிராம மக்களிடம் பரிசாக வழங்கிய மணமக்கள், அனைத்து மரக்கன்றுகளையும் நட்டு வளர்க்க வேண்டும் என அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர். அதனை கிராம மக்களும் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com