பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் நாடாளுமன்றக் குழுவிடம் நாளை விளக்கம்

வங்கித்துறையில் அதிகரித்து வரும் வாராக் கடன் மற்றும் கடன் மோசடி பிரச்னைகள் குறித்து 11 பொதுத் துறை வங்கிகளின் தலைமை அதிகாரிகள், நாடாளுமன்றக் குழு முன்பாக செவ்வாய்க்கிழமை விளக்கமளிக்க உள்ளனர்.

வங்கித்துறையில் அதிகரித்து வரும் வாராக் கடன் மற்றும் கடன் மோசடி பிரச்னைகள் குறித்து 11 பொதுத் துறை வங்கிகளின் தலைமை அதிகாரிகள், நாடாளுமன்றக் குழு முன்பாக செவ்வாய்க்கிழமை விளக்கமளிக்க உள்ளனர்.
 இதுதொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
 ஐடிபிஐ வங்கி, யுகோ வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தேனா வங்கி, ஒரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, யுனைடட் பேங்க் ஆஃப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, அலாகாபாத் வங்கி ஆகியவற்றின் தலைமை பிரதிநிதிகள் நாடாளுமன்ற நிலைக் குழு முன்பாக வரும் 26-ஆம் தேதி ஆஜராகின்றனர்.
 முன்னதாக, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் இம்மாத தொடக்கத்தில் நாடாளுமன்றக் குழு முன்பாக ஆஜராகியிருந்தார். அவரிடம், வாராக் கடன், வங்கி மோடி, பணத் தட்டுப்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டன.
 அதற்கு பதிலளித்த அவர், வங்கித் துறையை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் தெரிவித்தார் என்று அந்த வட்டாரங்கள் கூறின.
 இந்திய வங்கித் துறையில் வாராக் கடன் மதிப்பானது 2017 டிசம்பரில் ரூ.8.99 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இதில் பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் அளவு ரூ.7.77 லட்சம் கோடியாக உள்ளது. அதேபோல் வங்கிக் கடன் மோசடி பிரச்னையும் அதிகரித்து வருகிறது.
 2015-16 நிதியாண்டில் 4,693-ஆக இருந்த வங்கிக் கடன் மோசடி சம்பவ எண்ணிக்கை, 2017-18-இல் 5,904-ஆக அதிகரித்துள்ளது. மதிப்பு அடிப்படையில், 2015-16 காலகட்டத்தில் ரூ.18,698 கோடியாக இருந்த வங்கிக் கடன் மோசடியின் அளவு, நடப்பு ஆண்டு மார்ச் முடிவில் ரூ.32,361 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com