பிஎஸ்என்எலா? ஜியோவா?

தொலை தொடர்பு நிறுவனமான ஜியோ, இந்தியாவின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனமாக இருந்து வருகிறது.
பிஎஸ்என்எலா? ஜியோவா?

தொலை தொடர்பு நிறுவனமான ஜியோ, இந்தியாவின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனமாக இருந்து வருகிறது. ஆனால் அரசு சேவை மையமான பிஎஸ்என்எல்லுக்கு எப்போதும் பயனாளர்கள் அதிகம் இருப்பார்கள். காரணம் ஜியோவிற்கு முன்பே பல ஆண்டுகளாக இயங்கி வரும் முதன்மை சேவை இதுவே. மேலும் தனியார் நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்க தற்போது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சலுகைகளை அதிகரித்துள்ளது.

ப்ரீபெய்டு வாடிக்கையாளா்களுக்கு ரூ.1,999 கட்டணத்தில் ஒரு ஆண்டுக்கான சிறப்பு சலுகையை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது. ப்ரீபெய்டு வாடிக்கையாளா்களுக்கு அவ்வப்போது குறைந்த கட்டணத்தில் சிறறப்புச் சலுகை திட்டங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்து வருகிறது. அந்த வகையில், ரூ.1,999 கட்டணத்தில் ஒரு ஆண்டுக்கான ஊக்குவிப்பு சலுகை அறிவித்துள்ளது. இந்த சலுகை (ஜூன் 25) முதல் செப்டம்பா் 22 -ம் தேதி வரை 90 நாள்களுக்கு அமலில் இருக்கும்.

அதன்படி, இந்த புதிய திட்டத்தில் சோ்ந்தால், ரூ.1,999 கட்டணத்தில் ஓா் ஆண்டுக்கு (365 நாள்களுக்கு) அளவற்றற இலவச பேசும் அழைப்புகள் பெற முடியும். தினமும் 100 குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) அனுப்ப முடியும். தினமும் 2 ஜி.பி. டேட்டா பெறமுடியும் என பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த காலக்கட்டத்திலேயே ஜியோ, அனேக வாடிக்கையாயாளர்களைப் பெற்ற நிறுவனம். ஏர்டெல், வோடோஃபோன், ஐடியா உள்ளிட்ட தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக இருந்து வருகிறது. தற்போது பல இடங்களில் ஜியோவின் சேவையில் குறைபாடுகள் உள்ளது என்றும், சிக்னல் சரிவர கிடைப்பதில்லை எனவும் புகார்கள் வந்துள்ளன. அண்மையில் தமிழகம் முழுவதும் ஜியோ சேவை முற்றிலுமாக முடங்கியது. பல இடங்களில் வாய்ஸ் கால் செயல்படவில்லை. சுமார் மூன்று மணிநேரம் வரை நீடித்த இந்த தடங்கலால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

இது குறித்து ஜியோ நிறுவனம் கூறுகையில், தகவல் தொழில்நுட்ப சீரமைப்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டதாலும், புதிய நெட்வொர்க் அப்டேட்களை மேற்கொண்டதாலும் இந்தப் பிரச்னை ஏற்பட்டது என்றார்கள். மேலும் இது போன்ற பிரச்னைகள் இனி ஏற்படாது என்றும் உறுதி அளித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com