வாங்கிய கடனை திருப்பி அளிக்கத் தயார்! விஜய் மல்லையா அறிவிப்பு

இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச் சென்றவர்
வாங்கிய கடனை திருப்பி அளிக்கத் தயார்! விஜய் மல்லையா அறிவிப்பு

இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச் சென்றவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. இவரை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு பிரிட்டன் அரசிடம் இந்திய அரசு கோரிக்கை விடுத்திருததை அடுத்து, ஸ்காட்லாந்து யார்டு போலீஸாரால் மல்லையா கைது செய்யப்பட்டார். எனினும், கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே நிபந்தனை ஜாமீன் பெற்று அவர் வெளியே வந்துவிட்டார்.

வங்கி கடன் ஏய்ப்பு வழக்கில் விஜய் மல்லையா மீது சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. நிதி மோசடி தொடர்பாக மல்லையாவின் சொத்துக்களை ஏற்கனவே அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

மோசடி வழக்குகள் தொடர்பாக விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்தது. தன்னை நாடு கடத்தக் கூடாது என்று கோரி வெஸ்ட்மினிஸ்டர் நகர நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்தார். ஆனால் லண்டனில் விஜய் மல்லையா மீண்டும் கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்ட சில நிமிடங்களிலே லண்டன் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க உத்தரவு விட்டது. இந்தியாவில் விஜய் மல்லையா மீதான குற்றச்சாட்டுக்கள் நிலுவையில் உள்ளது.

குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் ஏதும் இல்லை என அவர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதை ஏற்று லண்டன் நீதிமன்றம் விஜய் மல்லையாவுக்கு ஜாமீன் வழங்கியது. இப்படி ஸ்காட்லாண்ட் யார்டு போலீஸாரால் இரண்டு முறை கைது செய்யப்பட்டாலும் உடனடியாக அவரால் ஜாமீன் பெற முடிந்தது. லண்டனிலிருந்து அவரை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வர, மத்திய அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. ஆனால், அது முடியாத காரியமாகவே இருந்து வருகிரது. இந்நிலையில் 9,000 கோடி கடனை திரும்பவும் செலுத்தாததால் உலகம் முழுவதும் இருக்கும் அவரின் சொத்துகளை முடக்க வழக்கு தொடர்ந்தன வங்கிகள். இதை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வாதாடியது மல்லையா தரப்பு. ஆனால், கடந்த மாதம் 8-ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், 13 வங்கிகள் மல்லையாவின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளதைத் தடுக்க முடியாது' என்று உத்தரவிட்டது.

இந்திய வங்கிகள் மல்லையாவிடம் பறிகொடுத்த ரூ.9000 கோடியை இப்படி நிலுவையில் விட்டு விட்டு, விவசாயிகள் மற்றும் ஏழைகளிடம் கெடுபடியாக பணத்தை வசூல் செய்யும் விதம், சமூக வலைத்தளங்கள், மற்றும் திரைப்படங்களிலும் கடும் விமரிசனங்களுக்கு உள்ளாகின. இந்நிலையில் பொதுத்துறை வங்கிகளில் பெற்ற கடனை திரும்ப செலுத்த தயார் என்றும் கடனைத் திரும்ப செலுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com