சமூக பாதுகாப்பு திட்டங்களால் 50 கோடி பேர் பலன்: மோடி பெருமிதம்

இந்தியாவில் 50 கோடி பேர் சமூக பாதுகாப்பு திட்டங்கள் கீழ் இணைந்துள்ளதாகவும், இது 2014-ஐ காட்டிலும் 10 மடங்கு அதிகம் என்றும் பிரதமர் மோடி புதன்கிழமை தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிரதமர் மோடி, பல சமூக பாதுகாப்பு திட்டங்களால் பலன் அடைந்தவர்களிடம் தனது நமோ செயலி மூலம் காணொலி காட்சியில் உரையாடினார். அதில், அவர் பேசியதாவது,

"பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி யோஜனா மற்றும் அடல் பென்ஷன் யோஜனா உள்ளிட்ட திட்டங்களின் கீழ் 20 கோடி மக்கள் பாதுகாக்கப்பட்டு பலன் அடைந்துள்ளனர். பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீம யோஜனா திட்டத்தின் கீழ் அரசு ஆயுள் காப்பீடு திட்டத்தை கொண்டுள்ளது. அதில் 5.5 கோடி மக்களுக்கு மேல் பதிவு செய்து, கோடிக்கணக்கான ரூபாய்களை கோரியுள்ளனர்.     "

மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதிய திட்டமான பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா திட்டத்துக்கு 3 லட்சத்துக்கும் மேலான மக்கள் இணைந்துள்ளனர்.   

அரசு பாதுகாப்பு திட்டங்கள் மூலம் நிலையற்ற வாழ்வை சமாளிக்க அரசு குறைந்த கட்டணத் தொகையில் சமூகத்தின் அனைத்து தர மக்களின் பொருளாதார பாதுகாப்பு உறுதிசெய்யப்படுகிறது.  

பிரதான் மந்திரி யோஜனா திட்டத்தில் 3 அம்சங்களில் வலியுறுத்தியுள்ளோம். ஏழை மக்களுக்கு வங்கி கதவை திறக்க வேண்டும், சிறு தொழில் முனைவோருக்கும், வளரும் தொழில்முனைவோருக்கு மூலதனம் அமைத்துத் தர வேண்டும் மற்றும் ஏழை மற்றும் பாதிக்கப்படும் மக்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டம் உருவாக்க வேண்டும்.  

நிறைய பெண்கள் வங்கி கணக்குகள் வைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. நிதி சார்ந்த துறைகளில் பெண்களின் பங்களிப்பது மிக முக்கியம்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com