காஷ்மீரில் ஆட்சி கலைத்ததில் பாஜகவுக்கு அரசியல் உள்நோக்கம் - பிரகாஷ் காரத்

காஷ்மீரில் உள்நோக்கத்துடன் தான் பாஜக ஆட்சியை கலைத்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளர் பிரகாஷ் காரத் குற்றம்சாட்டியுள்ளார்.
காஷ்மீரில் ஆட்சி கலைத்ததில் பாஜகவுக்கு அரசியல் உள்நோக்கம் - பிரகாஷ் காரத்

காஷ்மீரில் கூட்டணி கட்சியான ஆளும் பிடிபிக்கு தெரிவித்து வந்த ஆதரவை பாஜக திரும்பப் பெற்றது. இதனால், தற்போது அங்கு ஆளுநர் ஆட்சி நடைமுறையில் உள்ளது. 

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளர் பிரகாஷ் காரத் இன்று (வியாழக்கிழமை) கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, 

"ஆளும் கட்சி நூற்றுக்கணக்கான இளைஞர்களை பயங்கரவாதத்துக்கு கொண்டு செல்கிறது. 2019 மக்களவை தேர்தலை மனதில் வைத்தே அரசியல் உள்நோக்கத்துடன் பாஜக காஷ்மீரில் ஆட்சியை கலைக்கும் முடிவை எடுத்துள்ளது. காஷ்மீர் மக்களை தேசத்துக்கு எதிரானவர்கள், காஷ்மீரை பயங்கரவாத கூடாரம் என்பதையே பாஜக இலக்காக நிர்ணயிக்கவுள்ளது. பாஜகவுக்கு, நாடு முழுவதும் இந்து மத உணர்வை ஒன்றிணைப்பதற்காக காஷ்மீரை இழக்கலாம்.

தேசிய பாதுகாப்பு என்று கருதி பயங்கரவாதத்தை ஒழித்து அங்கு மதவாத பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. பிடிபி மற்றும் காஷ்மீர் இஸ்லாமியர்கள் பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்துடன் சுமூகமான நடவடிக்கையை மேற்கொண்டு வந்ததால் பாஜகவின் திட்டம் முறியடிக்கப்பட்டது. 

முன்நோக்கி செல்வதற்கு ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற படைகள் ஜம்மு காஷ்மீரில் அரசியல் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும். 

பாஜகவின் குறுகிய குழு விருப்பத்துக்காக பாஜக காஷ்மீர் மக்களை தியாகம் செய்வதற்கு அவர்களை அனுமதி விடக்கூடாது. ஜம்மு காஷ்மீரில் பாஜகவின் பிரிவினைவாதம் யுத்தி குறித்து நாடு முழுவதும் பிரச்சாரம் மூலம் வெளிக்கொண்டுவர வேண்டும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com